கேரளாவில் 5 ஆண்டுகளில் மாயமான 62 குழந்தைகள் எங்கே?

152 0

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஓயூரை சேர்ந்தவர் ரெஜி. இவரது மகள் அபிகேல் சாரா ரெஜினா (வயது 6). இவர் தனது 8 வயது அண்ணன் ஜோனதானுடன் டியூசன் வகுப்புக்கு சென்றபோது, நேற்று முன்தினம் காரில் வந்த கும்பலால் கடத்தப்பட்டார்.

கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சிறுமியை விடுவிக்க ரூ.15 லட்சம் கேட்டு கடத்தல் கும்பல் மிரட்டல் விடுத்தது. இந்த நிலையில் சிறுவன் ஜோனா தெரிவித்த அடையாளங்களை வைத்து கடத்தல் நபரின் படத்தை வரைந்து அதனை வெளியிட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.கேரளாவில் 5 ஆண்டுகளில் மாயமான 62 குழந்தைகள் எங்கே? | 62 children missing in 5  years in Kerala

இந்த சூழலில் நேற்று மதியம் கொல்லம் ஆசிரமம் மைதானத்தில் கடத்தப்பட்ட சிறுமி அபிகேல் சாரா ரெஜினா தனித்து நின்றார். இதனை பார்த்த கல்லூரி மாணவ-மாணவிகள் சிலர், சிறுமியிடம் பேச்சு கொடுத்தபோது, அவர் தான் கடத்தப்பட்ட அபிகேல் சாரா ரெஜினா என தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சிறுமியை மீட்டனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். முன்னதாக போலீசார் அவரை விசாரித்தபோது, இரவில் ஒரு பெண் மற்றும் 3 ஆண்கள் தன்னை ஒரு பெரிய வீட்டில் தங்க வைத்ததாகவும், நேற்று பகல் கொல்லம் ஆசிரமம் மைதானத்தில் தன்னுடன் வந்த பெண் இறக்கி விட்டதாகவும், அந்த பெண் மீண்டும் வருவதாக கூறிச் சென்றதாகவும் தெரிவித்தார்.

சிறுமியை மீட்ட மாணவ-மாணவிகள் கூறுகையில், நாங்கள் தேர்வு எழுதி விட்டு வரும்போது சிறுமி தவிக்கும் நிலையை கண்டோம். அவள் சோர்வாக இருந்ததால் பிஸ்கட் மற்றும் தண்ணீர் கொடுத்தோம். அப்போது அந்த பகுதியில் இருந்து மஞ்சள் சுடிதார் அணிந்து வெள்ளை சால்வையால் முகத்தை மூடிய ஒரு பெண் புறப்பட்டுச் சென்றதை பார்த்ததாகவும் தெரிவித்தனர்.

எனவே அவர் தான் சிறுமி அபிகேல் சாரா ரெஜினாவை அங்கு விட்டுச்சென்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவரை டி.ஐ.ஜி. நிஷாந்தினி தலைமையில் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் கடத்தலில் ஈடுபட்டவர் சீட்டு மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்ட ப்பட்டவர் என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவரை தேடி வீட்டுக்குச் சென்றபோது அங்கு அவர் இல்லை. அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண், அவரது உறவுக்காரர் என்பதும் போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சூழலில், கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இதுவரை 62 குழந்தைகள் மாயமாகி உள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இவர்களில் 43 பேர் சிறுவர்கள், 19 பேர் சிறுமிகள். குழந்தைகள் காணாமல்போன வழக்குகளை தீர்ப்பதில் கேரள போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது. இவற்றில் சில வழக்குகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவற்றை முடித்து வைக்க கோர்ட்டுகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மனோஜ்குமார் கூறுகையில், குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் மிகுந்த கவலை அளிக்கிறது. பெரும்பாலான சம்பவங்களில் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், போலீசார் இன்னும் சில வழக்குகளை கண்டுபிடிக்கவில்லை. ஓயூரை சேர்ந்த சிறுமி அபிகேல் சாரா ரெஜினா கடத்தல் விவகாரத்தில் விசாரணை நடத்தியது போல் அனைத்து வழக்குகளிலும் போலீசார் செயல்பட வேண்டும் என்றார்.

கடந்த 2005-ம் ஆண்டு மே மாதம் ஆலப்புழாவில் 7 வயது சிறுவன் ராகுல் கிரிக்கெட் விளையாடியபோது கடத்தப்பட்டுள்ளான். இதனை தற்போது நினைவுகூர்ந்த அவனது தாயார் மினி ராஜூ, சிறுமி அபிகேல் சாரா ரெஜினா மீட்கப்பட்டது சந்தோஷம் தருகிறது. குறைந்தபட்சம் ஒரு தாயின் கண்ணீராவது துடைக்கப்பட்டிருப்பதில் நான் நிம்மதி அடைகிறேன். என் மகனுக்கு நேர்ந்த கதி வேறு எந்த குழந்தைக்கும் வரக்கூடாது. அவன் விஷயத்தில், தற்போது செயல்பட்டதுபோல் அனைவரும் அர்ப்பணிப்பு காட்டியிருந்தால், ராகுலை கண்டுபிடித்திருக்க முடியும். ஆனால் அவனது வழக்கின் விசாரணை உள்ளூர் அளவிலேயே முடிந்து விட்டது என்றார். இருப்பினும் தன் மகன் உயிருடன் இருப்பார். ஒரு நாள் திரும்பி வருவார் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

 

Related Post

சலுகைனா இதான்.. ரூ. 6000 விலைக்கு Smart TV..

Posted by - December 21, 2024 0
உங்கள் வீட்டிற்கு புதிதாக ஸ்மார்ட் டிவி (Smart TV) வாங்கும் ஐடியா இருக்கிறதா? அப்படியானால் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தற்போது நடைபெறும் பிக் சேவிங் டே சேல்ஸ்…

ஆந்திராவில் கிராமங்களில் மீன் மழை- ஆச்சரியத்துடன் அள்ளிச் சென்றனர்

Posted by - July 21, 2023 0
திருப்பதி: ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வஜ்ரபு கொட்டூர்…

7 கட்டமாக மக்களவைத் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted by - March 16, 2024 0
7 கட்டமாக மக்களவைத் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.…

டெல்லியில் பட்டப்பகலில் வழிப்பறி சம்பவம்: இருவர் கைது- போலீஸ் விசாரணை

Posted by - June 27, 2023 0
டெல்லி சாந்தினிசவுக்கில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வருபவர் பட்டேல் சஜன் குமார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காக குருகிராமிற்கு காரில் சென்றார். செங்கோட்டை…

கூகுள் தேடல் 2024:இதையெல்லாமா கூகுளில் தேடுவீங்க…

Posted by - December 11, 2024 0
இந்தியர்கள் மொத்தமாக கூகுளில் அதிகம் தேடியது என்ன? இந்தியன் பிரீமியர் லீக் T20 உலகக் கோப்பை பாரதிய ஜனதா கட்சி தேர்தல் முடிவுகள் 2024 ஒலிம்பிக்ஸ் 2024…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *