பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…

253 0

பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததுபிஎஸ்எல்வி ராக்கெட் இன்று காலை 11.56 மணிக்கு கவுண்ட்டவுனை நிறைவு செய்துவிட்டு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ராக்கெட்டும், செயற்கைகோள்களும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதற்கான 25.30 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.26 மணிக்கு தொடங்கிய நிலையில், இன்று காலை 11.56 மணிக்கு கவுண்ட்டவுனை நிறைவு செய்துவிட்டு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் இந்தியாவின் 960 கிலோ எடை கொண்ட ‘ஓசன்சாட்-03’ (இ.ஓ.எஸ்-06) என்ற புவியை கண்காணிக்கும் செயற்கைகோள் மற்றும் 8 நானோ செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. அவற்றில் இந்தியாவின் ஐ.என்.எஸ். 2பி, பிக்சல் இந்தியா நிறுவனத்தின் ஆனந்த் செயற்கைகோள், தைபோல்ட் 1, தைபோல்ட் 2 மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 4 ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைகோள்களும் அடங்கியுள்ளன. ராக்கெட்டும், செயற்கைகோள்களும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Related Post

கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்து ஆசி வழங்கிய கணவன்

Posted by - July 8, 2023 0
பீகார் மாநிலம் நவாடா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடைய கணவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில்…

டாக்டர் அம்பேத்கரின் சமத்துவம், கண்ணியம் அயராத போராட்டம் எதிர்கால தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது – பிரதமர் மோடி புகழாரம்!

Posted by - December 6, 2024 0
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது: “மகாபரிநிர்வான் திவாஸ் அன்று, நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரும், சமூக நீதியின் கலங்கரை விளக்கமுமான டாக்டர் பாபாசாகேப்…

தன்பாலின ஈர்ப்பால் விபரீதம்- திருமண ஆசை காட்டி நண்பனை பெண்ணாக மாற்றிய வாலிபர்

Posted by - August 17, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் கிருஷ்ண லங்கா பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர்.…

தலைநகரில் வேகமெடுக்கும் கொரோனா- ஒரே நாளில் 1,603 பேருக்கு தொற்று உறுதி

Posted by - April 21, 2023 0
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின்…

லேண்டர் தரையிறங்கிய 6 மணி நேரத்திற்கு பின் நிலவின் தரையை தொட்டது ரோவர்

Posted by - August 24, 2023 0
புதுடெல்லி: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்தது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *