ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அலைந்த பரிதாபம்- ½ லிட்டர் பாலை 100 ரூபாய்க்கு விற்றனர்

145 0

சென்னை:

‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பெரும்பாலான இடங்களில் 3 அடி வரை மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் வடியாத நிலையில், பல இடங்களில் போக்குவரத்து முடங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை யில் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பெரும் இன்னலை சந்தித்தனர். சென்னையில் வியாசர்பாடி, எம்.கே.பி. நகர் பகுதி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, அம்பத்தூர், மயிலாப்பூர் உள்பட பல்வேறு இடங்களில் ஆவின் பால் வினியோகம் பாதிக்கப்பட்டது.

ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அலைந்த பரிதாபம்- ½ லிட்டர் பாலை 100  ரூபாய்க்கு விற்றனர் | It's a pity that people wandered around without  getting milk - ½ liter of milk was sold for 100 ...
சென்னையில் ஆவின் பாலை பொருத்தவரை 14.75 லட்சம் லிட்டர் பால் தினசரி வினியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் தொடர் மழை காரணமாக, சென்னை மற்றும் புறநகரில் பெரும்பாலான இடங்களில் நேற்று காலையில் வினியோகம் மிகக் குறைவாகவே இருந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே பால் வினியோகம் செய்யப்பட்டது. இந்த பாலை வாங்க பொதுமக்கள் நெடுந்தொலைவு வரை வரிசையில் காத்திருந்தனர். ஆவின் பால் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட் வினியோகமும் பாதிக்கப்பட்டது.

இது குறித்து சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறும்போது, “ஆவின் பால் மட்டுமின்றி தனியார் பால் பாக்கெட்டும் கிடைக்கவில்லை. சில இடங்களில் அரை லிட்டர் பால் 100 ரூபாய்க்கு விற்றனர். மக்களின் தேவையை தெரிந்து கொண்டு 4 மடங்கு விலையை உயர்த்தி விற்றனர்.

எனவே, அத்தியாவசிய தேவையான பாலை தட்டுப்பாடு இன்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். ஆவின் பால் வினியோகம் செய்யக்கூடிய லாரி ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் வாகனங்களை நேற்று இயக்கவில்லை. இதனால் மாநகர பஸ்கள் மூலம் ஆவின் பால் மாதவரம் பகுதியில் வினியோகம் செய்யப்பட்டது. ஆவின் பால் இன்றும் பல இடங்களில் தாமதமாக சப்ளை செய்யப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் பால் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்து நின்றனர்.

இது குறித்து ஆவின் அதிகாரிகள் கூறும்போது, “அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய பால் பண்ணைகளில் மழைநீர் பாதிப்பு ஏற்பட்டது. இது தவிர மழையால், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவியது. இதனால் பால் விநியோகம் பாதித்தது. இன்று ஆவின் வினியோகம் சீராகி விடும்” என்றனர்.

ஆவின் பால் அதிக விலைக்கு விற்பது குறித்த புகாரை தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Related Post

தொடரும் ஆசிரியர்கள் போராட்டம் – போர்களம் போல காட்சியளிக்கும் அன்பழகன் வளாகம் | Teachers Protest

Posted by - October 4, 2023 0
சம வேலைக்கு சம ஊதியம்: தொடரும் ஆசிரியர்கள் போராட்டம். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் நடத்திய இரண்டு சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில்…

வெறுமனே இந்த “மஞ்சள்” கலர் போதும்.. ஆச்சரியங்களை அள்ளி தரும் அதிசய உணவுகள்.. ஆயுசும் கூடும்.. அருமை

Posted by - November 18, 2023 0
சென்னை: உணவுகளில் இருக்கும் நிறங்களும் ஆரோக்கியம் தரக்கூடியவை.. கலர் கலர் காய்கறிகளே, உடலுக்கு நன்மையை தரும் என்கிறார்கள்.. அந்தவகையில், மஞ்சள் கலரையும் தவிர்த்து விட முடியாது. நீலம்…

வல்லூர் அனல் மின் நிலையத்தில் டர்பன் வெடித்து திடீர் தீ விபத்து-500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

Posted by - August 12, 2023 0
பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக வல்லூர் அனல்…

டாக்டர்.ராதாகிருஷ்ணன் படித்த பள்ளியில் இடியும் நிலையில் கட்டிடங்கள்- ஆசிரியர் தினம் கொண்டாடும் நிலையில் அவலம்

Posted by - September 4, 2023 0
ராணிப்பேட்டை: முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன். இவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற…

தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர்களிடம் 40 % கமிஷன் கேட்கும் திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Posted by - April 13, 2024 0
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக, கோயம்புத்தூர் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் குறித்துக் கவலையே இல்லாமல் இருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தமிழக பாஜக சார்பாக கோவை பாராளுமன்றத் தேர்தல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *