புதுச்சேரியில் மீண்டும் கொரோனா பரவல்: பொதுமக்கள் அச்சம்

208 0

புதுச்சேரி:

புதுச்சேரியில் சில மாதமாக கொரோனா தொற்று இல்லாமல் பூஜ்ஜியமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மக்கள் சளி, காய்ச்சலால் அவதியடைந்து வந்தனர். தற்போது புதுச்சேரியில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு சிகிச்சை பெற அரசு ஆஸ்பத்திரியில் அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர். இதில் சிகிச்சைக்காக வந்த புதுச்சேரியை சேர்ந்த 43 நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.Read all Latest Updates on and about corona virus in Puducherryஇதில் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் ஜிப்மர் உள்பட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவதாக புதுவை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு, அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் கடந்த மே மாதத்திற்கு பிறகு கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. 7 மாதத்திற்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது புதுச்சேரியில் கொரோனா மீண்டும் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். புதுவையில் கடந்த ஆண்டை விட டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆயிரத்து 673 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை 2 ஆயிரத்து 436 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுவை அரசு மருத்துவமனையில் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. தொடர் காய்ச்சலால் அவதிக்குள்ளாவோர் உடனடியாக மருத்துவமனையை அணுகுமாறும் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் புதுவை சுகாதாரதுறை அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலுகூறியதாவது:-

புதுவை அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. பொதுமக்கள் தங்கள் வீட்டையும், சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். டெங்கு கொசுக்களை ஒழிக்க தஞ்சாவூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கம்போசியா மீன்களை குட்டைகளில் விடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் புதுவையிலேயே கம்போசியா மீன்களை வளர்க்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Post

மழை தண்ணீரில் Chemical கழிவுகளை கலந்த விஷமிகள்- கண்டுபிடித்த விஜய் மக்கள் இயக்கத்தினர், வைரல் வீடியோ

Posted by - December 7, 2023 0
மிக்ஜாம் புயல் மிக்ஜாம் புயல் சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது சென்றுவிட்டது. புயல் முடிந்து 3 நாட்கள் ஆகியும் இன்னும் மக்கள் அந்த தாக்கத்தில் இருந்து இயல்பு நிலைக்கு…

மூதாட்டிகளை குறிவைத்து கொள்ளை: திருட்டு பெண் படம் அனுப்பி போலீசார் தேடுதல் வேட்டை- கை, கால்களை உடையுங்கள் என ஆடியோ

Posted by - August 14, 2023 0
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த சிறுகிளாம்பாடி செங்கம் மேலப்பாளையம் திருவண்ணாமலை சுற்றியுள்ள பகுதிகளிலும் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து பெண் ஒருவர் காரில் வந்து…

தி.மு.க. எம்.பி ஆ.ராசாவுக்கு சிபிஐ சம்மன்

Posted by - November 29, 2022 0
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆ.ராசாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆ.ராசா உள்பட 3 பேர் ஜனவரி 10-ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. சென்னை:…

கரு உருவாக்கும் கருவளர்ச்சேரி ..

Posted by - September 21, 2023 0
ஒரு பெண் கருவை சுமப்பதற்கு ஆதாரமாக திகழும் மூலத்தலமாக கரு வளர்ச்சேரி திகழ்கிறது கருவளர்ச்சேரிக்கு வரும்போது திருமணம் ஆன பெண்கள் தனியாக வருவதை தவிர்த்து கணவனுடன் வர…

உக்கிரமா இருக்கும்.. தென் மாவட்டங்களில் மீண்டும் அதிகனமழைக்கு வாய்ப்பு! 3 நாட்கள் அலர்டா இருங்க

Posted by - December 26, 2023 0
சென்னை: தென் மாவட்டங்களில் மீது அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் எச்சரித்து உள்ளார். ராஸ்பி அலைவு கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *