உக்கிரமா இருக்கும்.. தென் மாவட்டங்களில் மீண்டும் அதிகனமழைக்கு வாய்ப்பு! 3 நாட்கள் அலர்டா இருங்க

155 0

சென்னை:

தென் மாவட்டங்களில் மீது அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் எச்சரித்து உள்ளார்.

ராஸ்பி அலைவு கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிக்கு வருகை தந்துள்ளது. மேடன் ஜூலியன் அலைவு அடுத்த சில தினங்களில் மேற்கு இந்திய பெருங்கடல் பகுதிக்கு வருகை தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுமத்ரா பகுதியில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து டிசம் 28 ஆம் தேதி வாக்கில் குமரிக்கடல் பகுதிக்கு வருகை தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஈரப்பதமிகுந்த கீழ்திசை காற்றின் காரணமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை மாவட்ட கடலோரத்தில் லேசான/மிதமான மழை துவங்கியுள்ளது. இன்று முதல் (28.12.2023) வரை மத்திய கடலோர மாவட்டங்களான மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் தினசரி மிதமானது முதல் சற்றே கனமழையும், கடலோரத்தின் ஒரு சில இடங்களில் கனமழையும் பதிவாகும்.உக்கிரமா இருக்கும்.. தென் மாவட்டங்களில் மீண்டும் அதிகனமழைக்கு வாய்ப்பு! 3  நாட்கள் அலர்டா இருங்க | Very heavy rain alert for South Tamilnadu for next 3  days - Tamil Oneindia

பிற கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் போன்ற உட்புற தமிழகத்தில் தற்போது மழை வாய்ப்பு குறைவு. ஒரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பதிவாகலாம்.

தீவிரமடையும் ஆறாம் சுற்று மழை: குமரிக்கடல் நோக்கி நகரும் காற்று சுழற்சி & ஈரப்பதமான காற்று குவிதல் காரணமாக டிசம்பர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் ஆறாம் சுற்று மழை தீவிரமடைய கூடும். 29.12.2023 முதல் 31.12.2023 வரை: தென்மாவட்டங்கள் & டெல்டா மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒருசில இடங்களில் மிககனமழை முதல் அதிகனமழை வரை பதிவாகும். குறிப்பாக மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, மணிமுத்தாறு, பாபநாசம் போன்ற நீர் பிடிப்பு பகுதிகளில் டிசம்பர் 29, 30 தேதிகளில் அதிகனமழை வாய்ப்பு உள்ளது.

தென் மாவட்டங்களில் கடந்த சுற்று போல பெருமழை வாய்ப்பு இல்லை என்றாலும், தற்போதைய நிலையில் கன/மிககனமழை பதிவானாலே பாதிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை என்பது தேவை. குற்றாலம், தேக்கடி, கழுகுமலை, சபரி மலை செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் டிசம்பர் 29 முதல் ஜனவரி 1 வரை உங்கள் பயணங்களை தள்ளி வைப்பது நல்லது. வங்க கடலில் புயல் உருவாக தற்போது ஏற்ற சூழல் இல்லை, அதேபோல டெல்டா & வட மாவட்டங்களில் அதித கனமழை/ பெருமழைப் பொழிவு பதிவாக தற்போது வாய்ப்பு குறைவு.

சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் வளிமண்டல மத்திய அடுக்கின் மேற்கு & கீழ் அடுக்கின் கிழக்கு காற்று குவிதல் காரணமாக ஜனவரி முதல் வாரத்தில் பரவலாக கனமழையும், ஒருசில இடங்களில் அதித கனமழையும் ஏற்படும். டெல்டாவில் மேகமூட்டம் ,மிதமான/ சாரல் மழை பூச்சி பாதிப்பை வரும் நாட்களில் அதிகப்படுத்தும். அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களுக்கும் வரும் கால மழை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Related Post

உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ பெருமிதத்துடன் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

Posted by - January 23, 2025 0
தமிழ் நிலப்பரப்பில்தான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற ஆய்வுப் பிரகடனத்தை அறிவிப்பதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார். இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும்…

பூசணிக்காயுடன் இந்த 5 பொருட்களை அரைத்து ஜூஸ் போடுங்க! வெறும் வயிற்றில் குடிங்க.. அப்புறம் பாருங்க

Posted by - December 26, 2023 0
சென்னை: வெண் பூசணி சாறை காலை வெறும் வயிற்றில் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும். அந்த ஜூஸை எப்படி குடிக்க வேண்டும் தெரியுமா? நீர் சத்து இருக்கும்…

வாழை இலையை வெட்டி லாபமா…எப்படி …?

Posted by - December 10, 2024 0
#Banana #Leaf #Business #Plan –  பெரிய உணவகங்களில்   வாழை இலை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அந்த வகையில் முன்பெல்லாம் வாழை இலையை அப்படியே அறுத்து ஹோட்டல்களுக்கு…

பெண்களை சூப்பர்வுமனாக மாற்ற இந்த 5 சூப்பர் உணவுகளை அவங்க உணவில் அவசியம் சேர்த்துக்கணுமாம்…!

Posted by - December 22, 2023 0
பெண்கள் பெரும்பாலும் அலுவலகம் மற்றும் வீட்டு வேலைகளின் சுமையால் தங்கள் சொந்த ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. அதனால் படிப்படியாக, அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள், இதன் காரணமாக,…

குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று காலை முதல் அனுமதி- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Posted by - June 20, 2023 0
தென்காசி: தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுவது தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் ஆகும். தென்மேற்கு பருவமழை காலங்களில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *