உலகிலேயே வேகமாக வளர்ச்சி அடையும் முன்னணி பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா முதன்மையாக இருப்பது மட்டும் அல்லாமல் டிஜிட்டல் வர்த்தகச் சந்தையில் மாபெரும் வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டு இருக்கும் காரணத்தால் உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனங்களுக்கு இந்தியா முக்கிய டார்கெட் ஆக விளங்கி வருகிறது.
ஆனால் தற்போது உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் உருவாகியிருக்கும் ரெசிஷன் அச்சம் ஒட்டுமொத்த வர்த்தகம் மற்றும் முதலீட்டு சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது.
பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்வு வர்த்தகத்தையும், புதிய முதலீடுகளையும் பெரிய அளவில் குறைத்துள்ளது.
இந்த நிலையில் அமேசான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அதிர்ச்சியை அளிக்கிறது.
அமேசான்.காம் உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் மற்றும் டெக் சேவையாக விளங்கும் அமேசான்.காம் தனது செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக ஏற்கனவே 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது மட்டும் அல்லாமல் வர்த்தகம், லாபம் அளிக்காத வர்த்தகத்தை மூட முடிவு செய்துள்ளது. பணிநீக்கம் ஏற்கனவே ஊழியர்கள் பணிநீக்கத்தில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் அடுத்தடுத்து வர்த்தகத்தை மூடுவது அமேசான் ஊழியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகிறது என்றால் மிகையில்லை. மறுசீரமைப்பு அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அமேசான் இந்தியாவில் தனது வர்த்தகத்தை மறுசீரமைப்புச் செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் போதிய வர்த்தகமும், லாபமும் அளிக்காத வர்த்தகத்தை மூட முடிவு செய்துள்ளது. ஹோல்சேல் வர்த்தகப் பிரிவு இந்த நிலையில் அமேசான் தற்போது வெளியிட்டு உள்ள அறிவிப்பின் படி அமேசான் இந்தியாவின் ஹோல்சேல் வர்த்தகப் பிரிவான Amazon Distribution தற்போது பெங்களூர், மைசூர் மற்றும் ஹூப்ளி ஆகிய நகரங்களில் இருக்கும் சிறிய கடைகளுக்குப் பொருட்களை மொத்தமாகச் சப்ளை செய்து வருகிறது. இந்தச் சேவையைப் படிப்படியாக மொத்தமாக மூட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. சிறு விற்பனையாளர்கள் www.amazondistribution.in தளத்தின் மூலம் சிறு விற்பனையாளர்களுக்குத் தேவையான பொருட்கள் தனிப்பட்ட தளத்தில் ஆர்டர் பெறப்பட்டு டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அமேசான் பிஸ்னஸ் பிரிவு வர்த்தகத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை எனவும் விளக்கம் கொடுத்துள்ளது அமேசான். உணவு டெலிலரி, கல்வி சேவை மூடல் கடந்த வார இறுதியில் தான் அமேசான் தனது உணவு டெலிலரி வர்த்தகத்தையும், கல்வி சேவை வர்த்தகத்தையும் மூடுவதாக அறிவித்த நிலையில், இன்று மொத்த விலை விற்பனை பிரிவான அமேசான் டிஸ்ட்ரிபியூஷன் வர்த்தகத்தை மூடுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் அமேசான் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவு டெலிவரி சேவை மூடல் உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் மற்றும் டெக் சேவை நிறுவனமான அமேசான்.காம் குழுமத்தின் இந்தியப் பிரிவு, நாட்டில் சோதனை செய்து வந்த உணவு விநியோக செயல்பாட்டை நிறுத்துவதாக வெள்ளிக்கிழமை கூறியது. உணவு டெலிவரி சேவையில் மிகப்பெரிய போட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் இப்போட்டியைச் சமாளிக்க முடியாமல் அமேசான் புட் வர்த்தகப் பிரிவை மொத்தமாக மூட உள்ளதாக அறிவித்துள்ளது. கல்வி சேவை மூடல் இதேவேளையில் கொரோனா தொற்றுநோய் பாதிப்புக்கு முன்பாகவே ஆன்லைன் கல்விக்கான தேவை அதிகமாக இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமேசான் இந்தியா உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் கல்வி தளமான அமேசான் அகாடமி பல வருடமாக இயக்கி வந்த நிலையில் இதையும் நிறுத்துவதாகக் கடந்த வாரம் வியாழக்கிழமை கூறியது. அமேசான் நிறுவனம் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது மட்டும் அல்லாமல் இந்தியாவில் தனக்கு லாபம் அளிக்காத பிரிவுகளையும் மூட உள்ளது.