திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி: பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு

136 0

திருச்சி: திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் விமான நிலையத்திலிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு காரில் சென்ற பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வழிநெடுகிலும் ஆங்காங்கே மேடை அமைத்து பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. சாலையில் திரண்டிருந்த பாஜகவினர் பிரதமரின் கார் கடந்தபோது மலர்தூவி வரவேற்பு நல்கினர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு வந்த பிதமர் மோடி அங்கு பாரதிதாசன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக பிரதமர் உள்ளே வந்ததும், பதக்கம் பெறும் மாணவர்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு முன்னால் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் பிரதமர், ஆளுநர், முதல்வர் அமர்ந்தனர். குழு புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. பின்னர் அவர்களைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். பட்டம் பெற்ற மாணவர்களை நோக்கி “டெல்லிக்கு வர விருப்பமா?” என்று அவர் வினவினார். மாணவர்கள் உற்சாகமான குரலில் ஆமோதித்தனர்.

Related Post

சதுரங்கவேட்டை சினிமா பாணியில் இரிடியம் கண்டுபிடிக்கும் ‘ரைஸ் புல்லிங் எந்திரம்’ என கூறி மோசடி-2 பேர் கைது

Posted by - August 2, 2023 0
வந்தவாசி: விழுப்புரம் மாவட்டம் நாப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர்கணேஷ். வியாபாரியான இவர் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடனாளி ஆனார். இதையடுத்து நண்பர் மூலமாக ரைஸ் புல்லிங் எந்திரம் வாங்கி…

சீனா, அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. அவசர ஆலோசனையில் இந்தியா?

Posted by - December 21, 2022 0
Coronavirus | இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. அனைத்து…

மணிப்பூரில் மீண்டும் இணைய சேவைகளுக்கு தடை

Posted by - September 27, 2023 0
இம்பால்: மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில…

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. வானிலை மையம் எச்சரிக்கை

Posted by - May 22, 2024 0
 தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில்…

UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால் இனி UPI பேமெண்ட் பயன்படுத்த மாட்டோம்: கருத்துக்கணிப்பில் தகவல்!

Posted by - March 11, 2024 0
ஆரம்பத்தில் UPI மூலமாக செய்யப்படும் டிஜிட்டல் ட்ரான்ஸாக்ஷன் நமக்கு சௌகரியமானதாகவும், பழக்கப்பட்ட ஒன்றாகவும் இல்லாத காரணத்தினால் அதனை நாம் குறை கூறி வந்தோம். ஆரம்பத்தில் UPI மூலமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *