இந்த ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

94 0

சிவகங்கை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு, வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகில் உள்ள கல்லுவழி என்ற கிராமத்தில், நள்ளிரவில் வீடு புகுந்து, தூங்கிக்கொண்டிருந்த இரண்டு சிறார்கள் உள்ளிட்ட 5 பேரை கொடூரமாக வெட்டி, நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

திமுக ஆட்சியில், பொதுமக்கள் உயிர்ப் பாதுகாப்பு என்பது மிகப்பெரும் கேள்விக்குரியதாகியிருக்கிறது. சட்டம் ஒழுங்கு இதை விடக் கீழ்நிலைக்குச் செல்ல முடியாது என்றிருக்கையில், தினந்தோறும் நடைபெறும் குற்றச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கை இன்னும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்கின்றன.

சட்டம் ஒழுங்கு எனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், யாருக்கோ கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

திமுக அரசின் கையாலாகாத்தனத்தால், காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா என்ற கேள்வி, பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.ஒரு அரசின் அடிப்படைக் கடமையான, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மாடல் அரசுக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார்? என அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

சனாதன தர்மம் என்றால் என்ன? அது சர்ச்சையாக்கப்பட்டது ஏன் ?

Posted by - September 6, 2023 0
சனாதன தர்மம் பற்றி பேச்சு தான் கடந்த இரண்டு நாட்களாக அரசியல் ரீதியான விவாதத்திற்குரிய முக்கிய விஷயமாக மாறி உள்ளது. இதனால் சனாதன தர்மம் என்றால் என்ன,…

ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000.. மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

Posted by - March 27, 2023 0
தமிழகத்தில் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மகளிர் உரிமைத்தொகை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மகளிர் உதவித்தொகை திட்டத்தை…

பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை …

Posted by - May 11, 2023 0
மன்னார்குடி சட்டசபை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். தி.மு.க. அரசு பதவியேற்ற 2 ஆண்டில் 3-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை: தி.மு.க. அரசு…

கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Posted by - May 17, 2023 0
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதலமைச்சர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்ப முதலமைச்சர் உத்தரவு தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

`திருட்டுப்போன பைக்கை ஓட்டி வந்த போலீஸ்’ – தஞ்சாவூர் டி.ஐ.ஜி-யிடம் புகார் அளித்த விவசாயி

Posted by - December 2, 2022 0
“திருட்டுப்போன பைக்கை வாய்மேடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ் ஒருவர் பயன்படுத்திவருவது தெரியவந்தது. போலீஸ் என்பதால் பயந்துபோன நான், பைக் குறித்து எதுவும் கேட்கவில்லை.” ஒரு வருடத்துக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *