கோவையில் பிரபலமான பெண் பேருந்து ஓட்டுநருக்கு சிக்கல்… போலீசார் வழக்குப்பதிவு

150 0

கோவையின் பெண் பேருந்து ஓட்டுனர் என பிரபலமான சர்மிளா மீது காட்டூர் காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவையில் கடந்த இரண்டாம் தேதி சத்திரோடு சங்கனூர் சந்திப்பில் காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பணியில் இருந்து போது, அவ்வழியாக காரில் வந்த சர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அதனை கேட்டபோது வீடியோ எடுத்து சர்மிளா அவரது Instagram பக்கத்தில் தவறான தகவல்களை கொண்டு பதிவிட்டதாக ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார்.இந்த புகாரின் பேரில் IPC 506(i), 509, 66C information technoloy act இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு

வருகின்றனர்.

கோவையின் பெண் பேருந்து ஓட்டுனர் என்ற பெயரை பெற்ற சர்மிளா திடீரென அவரது பேருந்து நிறுவனத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவர் பேருந்து ஓட்டுநராக இருந்த பொழுது, திமுக எம். பி. கனிமொழி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.சர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமலஹாசன் சர்மிளாவை அழைத்து அவருக்கு காரை அன்பளிப்பாக அளித்திருந்தார். தற்போது அந்த காருக்குள் இருந்தபடி தான் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரிவை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

தொண்டை வலியுடன் ஆஸ்பத்திரிக்கு படையெடுக்கும் நோயாளிகள்

Posted by - July 10, 2023 0
சென்னை: தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பருவ காலத்தில் பரவும் வழக்கமான…

“கேவலமா இருக்கு” டங்ஸ்டன் விவகாரம்.. இபிஎஸ்!

Posted by - December 10, 2024 0
டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக துரோகம் இழைத்து விட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி அளித்துள்ளார். மதுரையில் டங்ஸ்டன்…

பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் அலட்சியபடுத்திய தமிழக அரசு…பொங்கி எழுந்த இடைநிலை ஆசிரியர்கள்…

Posted by - February 29, 2024 0
சென்னை: ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி அடுத்தகட்டமாக இன்று (பிப்.29) முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009…

Mohan G Arrest: பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைப் பேச்சு.. இயக்குநர் மோகன் ஜி கைது!

Posted by - September 24, 2024 0
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் மோகன் ஜி. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இவர் மீது…

சிறியாநங்கை.. பல நோய்களின் எதிரி சிறியா நங்கை.. சர்க்கரை நோயாளிகளே நோட் பண்ணிக்குங்க.. சூப்பர் மூலிகை

Posted by - November 3, 2023 0
சென்னை: ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் வளர்க்கப்பட வேண்டிய மூலிகைகளில் ஒன்றுதான் சிறியாநங்கை.. ஆச்சரியத்தக்க மருத்துவ குணங்களை கொண்டது இந்த செடி. நிலவேம்பு செடியை, சிறியாநங்கை என்று சொல்வார்கள்..…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *