சூடான, சுவையான ‘பாப்கார்ன்’ உடல் எடை அதிகரிக்குமா? popcorn

123 0

பாப்கார்ன்’ (popcorn)சாப்பிட, பெரியவர்கள்-சிறியவர்கள் என்ற வித்தியாசம் தேவையில்லை. பொரித்து, அவித்து, வறுத்து மக்காச்சோளம் சாப்பிடப்படுகிறது. சாதாரண ஒரு கோப்பை பொரித்த மக்காச்சோளத்தில் (பாப்கார்ன்) 31 கலோரி ஆற்றலே இருக்கும். இதே அளவுள்ள கோப்பையில் உருளை சிப்ஸ் சாப்பிட்டால் 139 கலோரி ஆற்றல் இருக்கும். எனவே மக்காச்சோளம் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்குமோ? என்ற கவலையே இல்லாமல் சாப்பிடலாம். ‘பாப்கார்ன்’ சாப்பிட, பெரியவர்கள்-சிறியவர்கள் என்ற வித்தியாசம் தேவையில்லை. எல்லா வயதினருமே விரும்பி சாப்பிடும் பாப்கார்ன் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா..? மக்காச்சோளம்தான் பாப்கார்னாக மாறுகிறது. இந்த மக்காச்சோளம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் ஒன்று. குறைந்த கலோரிகள் கொண்டது என்பதால் நொறுக்குத் தீனியாக நிறைய சாப்பிடலாம். பாப்கார்ன் தயாரிக்க பயன்படும் மக்காச்சோளம் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுத்தாத உணவுப் பண்டமாகும். பால், முட்டை, வேர்க்கடலை போன்ற உணவுப் பொருட்கள் ஒவ்வாமை கொண்டவர்கள்கூட மக்காச்சோளம் சாப்பிடலாம். பொரித்து, அவித்து, வறுத்து மக்காச்சோளம் சாப்பிடப்படுகிறது. மாவாக்கி, பண்டங்களாக தயாரித்தும் உண்ணப்படுகிறது. பலவிதமான மணம், சுவை, கூட்டுப்பொருட்களுடன் மக்காச்சோள திண்பண்டங்கள் கிடைக்கின்றன.
சூடான, சுவையான பாப்கார்ன்  உடல் எடை அதிகரிக்குமா?
மக்காச்சோளம் முழுவதும் நார்ச்சத்தும், நோய் எதிர்ப்பொருட்களும் கொண்டது. காய்கறி, பழங்களைவிட சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்கள் மக்காச்சோளத்தில் இருக்கின்றன. சராசரி எடைகொண்ட மக்காச்சோளத்தில் நூற்றுக்கணக்கான முத்துகள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பொரிக்கப்படாத நிலையிலேயே ஒரு கோப்பை நிறைய இருக்கும். 2 மேஜை கரண்டி அளவுள்ள மக்காச்சோள முத்துகளை பொரித்தால் ஒரு லிட்டர் அளவுள்ள பாப்கார்ன் கிடைக்கும். உலக நாடுகளை ஒப்பிடும்போது, அமெரிக்காவில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. கூடவே அமெரிக்கா வில்தான், அதிகளவிலான ‘பாப்கார்ன்’ சுவைக்கப்படுகின்றன. அங்கு, பாப்கார்ன்களுக்கான பிரத்யேக அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

Related Post

போலீஸ் போட்ட 33 நிபந்தனைகள்.. திராவிட கட்சிகளுக்கு சவால் விட்டு சரித்திரம் படைப்பாரா TVK விஜய்?

Posted by - September 26, 2024 0
சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த விஜய், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இக்கட்சியின் கொடியும், கொடிப்பாடலும் சமீபத்தில் அவரே வெளியிட்டார். கொடி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையில்…

ஐந்து உறுதிமொழிகள்.. தவெக கட்சியினருக்கு விஜய் அறிவுறுத்தல்

Posted by - February 19, 2024 0
தமிழக வெற்றி கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்ற நிலையில், நடிகர் விஜய் கட்சியினருக்கான ஐந்து உறுதிமொழிகளை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் விஜய் கடந்த…

ரவுண்டு கட்டப்பட்ட 6 திமுக அமைச்சர்கள் – வீட்டுக்கா? சிறைக்கா? தலை தப்புமா? ஆட்சி கிட்டுமா?

Posted by - April 26, 2025 0
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 6 அமைச்சர்களுக்கு வழக்குகளால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் சில அமைச்ச்சர்களுக்கு, பழைய வழக்குகள் தற்போது…

சேற்றுப்புண் அல்ல.. கருப்பு பூஞ்சையை விட மோசமான பாக்டீரியா.. கொஞ்சம் ஏமாந்தால் கூட ஆளே காலிதான்!

Posted by - December 14, 2023 0
சென்னை: சென்னை பெரு வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து மீலியாய்டோசிஸ் எனும் பாக்டீரியா அதிக அளவில் பரவி வருவதாக சிவகங்கை அரசு மருத்துவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

சென்னையில் வீடுகளுக்கு முன் நோ பார்க்கிங் போர்டு வைத்ததால் நடவடிக்கை – நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 10, 2024 0
சென்னை நகரில் வீடுகளின் முன் அனுமதியின்றி ‘நோ பார்க்கிங்’ போர்டுகள் மற்றும் தடுப்புகளை வைத்திருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *