பிரதமர் மோடி
தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையான கூட்டணி. நேற்று பா.ம.க சேர்ந்துள்ளதால். ராமதாஸின் அனுபவ அறிவும் , அன்புமணியின் திறமையும் தமிழகத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல உதவும்” எனவும் தெரிவித்தார்.
“பா.ஜ.க வுக்கும் , தனக்கும் கிடைத்த ஆதரவை பார்த்து திமுகவிற்கு தூக்கமே தொலைந்து விட்டது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக நேற்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி கோவையில் வாகனப் பேரணி சென்றார். தொடர்ந்து இரவு கோவையில் தங்கிய அவர், இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பாலக்காடு புறப்பட்டுச் சென்றார். பாலக்காட்டில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, நண்பகல் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு பிற்பகல் 12.50 மணியளவில் சேலம் வந்தடைந்தார். சேலம் – நாமக்கல் புறவழிச்சாலையில் உள்ள கெஜல்நாயக்கன்பட்டியில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பாரத அன்னை வாழ்க .. என் தமிழ் சகோதார , சகோதரிகளே வணக்கம்.. கோட்டை மாரியம்மன் கோவில் இடத்திற்கு வந்துள்ளேன் என தமிழில் தனது உரையை தொடங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “இதற்கு முன்பு பல முறை வந்துள்ளேன். தமிழகத்தில் பா.ஜ.க வுக்கும் மோடிக்கும் கிடைத்த வரவேற்பு நாடே பார்த்தது. நான் நேற்று மக்கள் வெள்ளத்தில் நீந்தினேன். பா.ஜ.க வுக்கும் , மோடிக்கு கிடைத்த ஆதரவை பார்த்து திமுகவிற்கு தூக்கமே தொலைந்து விட்டது” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “தமிழ்நாடு மக்கள் முடிவு செய்து விட்டார்கள். தமிழகம் வளர்ச்சியடைய பாஜக 400 ஜ தாண்ட வேண்டும். பாரதம் தன்னிறைவு பெற , மீனவர் பாதுகாப்பிற்கு , விவசாயிகள் வளம் பெற 400 க்கு மேல வெற்றி பெற வேண்டும்” என்று பேசினார்.
“தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையான கூட்டணி. நேற்று பா.ம.க சேர்ந்துள்ளதால். ராமதாஸின் அனுபவ அறிவும் , அன்புமணியின் திறமையும் தமிழகத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல உதவும்” எனவும் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன் எம்.எல்.ஏ., பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, குஷ்பு மற்றும் அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகர் சரத்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.