IPL2024-வெற்றியுடன் ஐபிஎல் தொடரை ஆரம்பித்த சி.எஸ்.கே. – 6 விக். வித்தியாசத்தில் ஆர்சிபி-யை வென்றது

137 0

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று சவாலான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், முதல் போட்டியிலேயே பெங்களுரு அணியை வீழ்த்தி  வெற்றியுடன் சென்னை அணி நடப்பு சீசனை தொடங்கியுள்ளது.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. கடந்த ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றதன் அடிப்படையில் முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூப்ளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.தொடக்க வீரர்களாக அவரும் விராட் கோலியும் களம் இறங்கி ஓரளவு நல்ல தொடக்கத்தை அணிக்கு கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் சேர்த்தனர்.  டூப்ளசிஸ் 35 ரன்னிலும், அடுத்து வந்த ரஜத் பட்டிதார், கிளென் மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேமரூன் கிரீன் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். 11.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி அணி 78 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.

இதைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக்குடன் இணைந்து இளம் வீரர் அனுஜ் ராவத் பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். 26 பந்துகளை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் 2 சிக்சர் 3 பவுண்டரியுடன் 38 ரன்களும், அனுஜ் ராவத் 25 பந்துகளில் 3 சிக்சர் 4 பவுண்டரியுடன் 48 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் முஸ்தபிசுர் ரகுமான் 4 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று சவாலான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 15 ரன்களும், ரச்சின் ரவிந்திரா 37 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை சென்னை அணிக்கு கொடுத்தனர். அடுத்து வந்த ரஹானே 27 ரன்களும், டேரில் மிட்செல் 22 ரன்களும் சேர்க்க, சென்னை அணியின் வெற்றி இலகுவானது.

12.3 ஓவர்களில் சென்னை அணி 110 ரன்கள் எடுத்திருந்தபோது 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன்பின்னர் இணைந்த ஷிவம் துபே – ஜடேஜா இணை பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தது. துபே 28 பந்துகளில் 1 சிக்சர் 4 பவுண்டரியுடன் 34 ரன்களும், ஜடேஜா 17 பந்துகளில் 1 சிக்சருடன் 25 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றனர். 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது சென்னை அணி வெற்றி இலக்கை எட்டியது.

Related Post

மார்ச் 22-இல் IPL போட்டிகள் தொடக்கம்… முதல் 21 மேட்ச்சுக்கான அட்டவணை வெளியானது!!

Posted by - February 23, 2024 0
மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டி சென்னையில் மாலை 6.30-க்கு நடைபெறுகிறது. இந்த மேட்ச்சில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் 2024…

சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!

Posted by - April 25, 2025 0
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆர்சிபி சொந்த மண்ணில் முதல் வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்துள்ளது. சின்னசாமி மைதானத்தில்…

IPL 2024 : 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வென்றது பஞ்சாப் கிங்ஸ்…

Posted by - May 2, 2024 0
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு ஜானி பேர்ஸ்டோ சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு…

NZ vs BAN Live Score: கேப்டன் நஜ்முல் சிறப்பான பேட்டிங்… நியூசிலாந்துக்கு 237 ரன்கள் வெற்றி இலக்கு

Posted by - February 24, 2025 0
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2:30 மணி முதல் தொடங்கி நடந்து வரும் 6-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து –…

நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி… மரண மாஸ் வீடியோ

Posted by - March 24, 2025 0
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் எம்.எஸ் தோனி எப்போது பேட்டிங் வருவார் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர். இளம் விக்கெட் கீப்பர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *