நாடாளுமன்ற தேர்தல் எதிர்பார்ப்புகளை எல்லாம் மிஞ்சும் வகையில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கிறது.
சொந்த மண்ணில் அடுத்தடுத்து வெற்றி, அண்ணிய மண்ணில் அடுத்தடுத்து தோல்வி என களமாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிக்கு திரும்புமா? கொல்கத்தாவின் வெற்றிக்கு முற்றுப்புள்ளிவைக்குமா?
நாடாளுமன்ற தேர்தல் எதிர்பார்ப்புகளை எல்லாம் மிஞ்சும் வகையில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கிறது. அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையான சேப்பாக்கத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதித்து களமாடுகிறது சி.எஸ்.கே.
சொந்த இடத்தில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியை ருசித்த சென்னை அணி விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத் மைதானங்களில் அடுத்தடுத்து தோல்வியடைந்துள்ளது.
இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வெண்டிய நெருக்கடியில் சென்னை அணி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. கொல்கத்தா அணியோ முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை ருசித்துள்ளது.
சென்னை அணியில் பதிரனா, முஸ்தஃபீர் ரஹ்மான் இல்லாதது பந்துவீச்சில் பலம் இழந்து காணப்படுகிறது. இந்த போட்டியிலும் இவர்கள் அணியில் இடம்பெறுவது சந்தேகமே.
நேற்று சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் இதை உறுதிப்படுத்தினார்
தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்துரஜ், ரச்சின் பவர் பிளேயில் ரன் எடுக்க திணறுகின்றனர். ஆரம்பத்திலிருந்தே அடித்து ஆடவேண்டியது கட்டாயம். மற்றபடி சேப்பாக்கத்தில் தல தரிசனத்திற்காக கோடான கோடி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஜடேஜா, துபே மிடில் ஆர்டரில் அசத்த, மோயின் அலி, மிட்செல் கைகொடுத்தால் 200 ரன்களை தாண்டுவது நிச்சயம். அதே போல் தீபக் சாஹர், தேஷ்பாண்டே ஆரம்பத்திலே விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் கொல்கத்தாவின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தலாம்.
கொல்கத்தா அணியை பொருத்தவரை, சுனில் நரைன், ஷ்ரேயஸ் ஐயர், ரஸல், ரிங்கு சிங், என பேட்டிங்கில் அனைவரும் ஃபார்மில் இருக்கின்றனர்.
ஜடேஜா, துபே மிடில் ஆர்டரில் அசத்த, மோயின் அலி, மிட்செல் கைகொடுத்தால் 200 ரன்களை தாண்டுவது நிச்சயம். அதே போல் தீபக் சாஹர், தேஷ்பாண்டே ஆரம்பத்திலே விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் கொல்கத்தாவின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தலாம்.
கொல்கத்தா அணியை பொருத்தவரை, சுனில் நரைன், ஷ்ரேயஸ் ஐயர், ரஸல், ரிங்கு சிங், என பேட்டிங்கில் அனைவரும் ஃபார்மில் இருக்கின்றனர்.இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் ஆட்டத்தில் அணல் பறக்கும் என எதிர்பார்க்கலாம். சொந்த மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை ருசித்து துவண்ட ரசிகர்களை உற்சாகப்படுத்த களமிறங்கும் சி.எஸ்.கே அணி – நான்காவது வெற்றியை ருசிக்க காத்திருக்கும் கொல்கத்தா அணியை இதற்கு முன் 18 முறை வீழ்த்தியுள்ளது. கொல்கத்தா 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது