தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர்களிடம் 40 % கமிஷன் கேட்கும் திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

111 0

ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக, கோயம்புத்தூர் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் குறித்துக் கவலையே இல்லாமல் இருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தமிழக பாஜக சார்பாக கோவை பாராளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகளில், கோவையில் செமி கண்டக்டர்கள் தயாரிப்பது குறித்து குறிப்பிட்டதற்குப் பிறகே, கோவை குறித்து ஞாபகம் வந்திருக்கிறது.

தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய வருபவர்களிடம், 40% கமிஷன் வழங்க வேண்டும், முதலமைச்சர் மருமகனைச் சென்று நள்ளிரவில் சந்திக்க வேண்டும், முதலமைச்சரின் குடும்ப ஆடிட்டரைச் சந்திக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்தால், எந்த நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரும்? தங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பளிக்கும் மாநிலங்களில்தான், முதலீடு செய்ய நிறுவனங்கள் முன்வருவார்கள்.

தங்கள் மீது முழுத் தவறையும் வைத்துக்கொண்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் இளைஞர்கள் மீது அக்கறை இருப்பது போல் நடிக்க வேண்டாம். ஸ்டாலின் அவர்களே. கோவை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழக இளைஞர்களுக்கும், தொழில்துறையில் திமுக செய்து வரும் துரோகங்களை, ஜூன் 4 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாஜக நிச்சயம் சரிசெய்யும். பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் கோவையை மீட்டெடுப்பதே எங்கள் முதல் பணியாக இருக்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Related Post

வாழை இலையை வெட்டி லாபமா…எப்படி …?

Posted by - December 10, 2024 0
#Banana #Leaf #Business #Plan –  பெரிய உணவகங்களில்   வாழை இலை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அந்த வகையில் முன்பெல்லாம் வாழை இலையை அப்படியே அறுத்து ஹோட்டல்களுக்கு…

தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தினால் அடுத்த மாதமே பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிவிடும்: ராமதாஸ்

Posted by - April 8, 2024 0
சென்னை: இந்த தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தினால், அடுத்த மாதமே பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

தன்னை உருவாக்கிய கேப்டனை கண்டு கதறியழுத விஜய்..

Posted by - December 29, 2023 0
தமிழ் சினிமாவிற்கு இன்று மிகப்பெரும் பேரிழப்பு என்றே சொல்லலாம். கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் முடியாமல் இன்று இறந்தார். பல பிரபலங்கள் இன்று காலை முதலே தங்கள் இரங்கல்களை…

அரசு ஆஸ்பத்திரியில் இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கை அகற்றம்: தவறான சிகிச்சை என கணவர் குற்றச்சாட்டு

Posted by - September 28, 2023 0
சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜீனத் (வயது 35). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதி (32). இவர் நெஞ்சுவலி காரணமாக அருகில் உள்ள தனியார்…

காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Posted by - November 21, 2023 0
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த மழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *