விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்த கில்லி திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டு வரும் நிலையில் விஜய்யின் நடிப்பில் வெளியான மற்றொரு சூப்பர் ஹிட் படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய்யின் மிரட்டலான நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கில்லி திரைப்படம் திரையரங்குகளில் கடந்த சில நாட்களுக்கு முன் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.சுமார் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள கில்லி படத்தை ரசிகர்கள் தனது நண்பர்களுடன் சென்று திரையரங்குகளில் ஆட்டம்பாட்டத்துடன் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர்.
விஜய் , திரிஷா , பிரகாஷ் ராஜ் என ஏரளமான நட்சத்திரங்கள் நடித்த இப்படத்தை இன்று பார்க்கும் போதும் கொஞ்சம் கூட சலிப்பு தட்டாமல் அதே ஆர்வத்துடன் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் ரசிகர்களை கருத்து கூறி வருகின்றனர்.ரிலீஸ் ஆன நேரத்திலேயே முதன்முதலில் ரூ. 50 கோடி வசூலித்த படம் என்ற சாதனையை படைத்துள்ள நிலையில் தற்போது தளபதியின் ரசிகர்களுக்காக மற்றொரு நற்செய்தி வெளியாகியுள்ளது.விஜய்யின் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ்சில் பட்டயகிளப்பி வரும் நிலையில் விஜய்யின் மற்றொரு சூப்பர் ஹிட் படம் ரீரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .அந்த படம் எதுவென்றால் விஜய்-ஜோதிகா நடிப்பில் வெளியாகி தாறுமாறான வெற்றியை பெற்ற குஷி படம் தான் அடுத்ததாக ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .இதனால் தளபதியின் ரசிகர்கள் அந்த படத்தையும் திரையரங்குகளில் கொண்டாட செம ஆவலாக உள்ளனர்.