பரபரப்பாக நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடிய சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது .
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .
இதில் ஹைதராபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் SRH – RR அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .
இந்த போட்டியில் சஞ்சுவின் ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார் .
அதன்படி ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் வழக்கம் போல் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க ரன்கள் மளமளவென ஏறியது .
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இல்லாத SRH அணி 201 ரன்களை குவித்தது . இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது.
ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் இருவரையும் ஹைதராபாத் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமார் டக் அவுட் செய்து வெளியேற்றினார்.
பின்னர் அதிரடியாக விளையாடிய இளம்புலி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்த நிலையில் வெளியேற ஆட்டம் இறுதிவரை பரபரப்பாக சென்றது கடைசி ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைவை பட்ட நிலையில் ஸ்ட்ரிகிள் இருந்த வீரரை LBW அவுட் செய்த புவனேஸ்வர் குமார் ஹைதராபாத் அணியை வெற்றிபெற செய்தார்.
ராஜஸ்தான் வெற்றி பெற கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டபோது, விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமார் ஆட்ட நாயகன் விருதை வென்றார். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்கள் வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.