TVK கட்சி கொடிக்கு எதிராக கிளம்பிய பஞ்சாயத்து.. தேசிய கட்சி வைத்த செக், தளபதியின் ரியாக்சன் என்ன.?

99 0

தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த கொடியை ஏற்றி வைத்து உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார் விஜய்.

சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் அந்த கொடியில் இரட்டை யானைகளுக்கு நடுவில் வாகை மலர் இடம் பெற்றிருந்தது. இதை பார்க்கும் போது வெற்றிக்கான அடையாளம் என்பது தெளிவாக தெரிகிறது.

அதற்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில் பெவிகால் லோகோ போல் இருக்கிறது. கொடி டிசைன் கூட காப்பி என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில் கட்சியின் கொடி குறித்து மற்றொரு பஞ்சாயத்து எழுந்துள்ளது.

அதாவது அந்த கொடியில் இடம் பெற்றுள்ள யானை பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமாகும்.. இப்படி அங்கீகாரம் பெற்ற தேசிய கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி ரொம்பவும் தவறானது.

பகுஜன் சமாஜ் கட்சியின் எதிர்ப்பு

அதனால் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் உடனடியாக கொடியில் இருக்கும் யானை படத்தை நீக்க வேண்டும். இல்லை என்றால் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுப்போம் என தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது. இதுதான் இப்போது பரபரப்புக்கு காரணமாக இருக்கிறது.

கட்சி கொடியை ஏற்றி ஒரு நாள் கூட முழுதாக முடியவில்லை. அதற்குள்ளாக இப்படி ஒரு பிரச்சனை வந்திருக்கிறது ஏற்கனவே கட்சி பெயரை அறிவித்தபோது சில சர்ச்சைகள் எழுந்தது. அதேபோல் தற்போது முளைத்திருக்கும் இந்த பிரச்சினையை விஜய் நிச்சயம் சரி செய்து விடுவார்.

அது மட்டுமே இன்றி இது போன்ற விஷயங்களை எல்லாம் தீர யோசிக்காமல் அவர் தன்னுடைய கட்சியின் கொடியில் யானை படத்தை பயன்படுத்தி இருக்க மாட்டார். அதனால் விரைவில் இது குறித்த விளக்கம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?

Posted by - March 10, 2025 0
அதிமுக வரலாற்றில் முதல் முறையாக அனைத்து மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் உரையாடி வருகிறார் திருச்சி அதிமுகவினர்…

திமுகவை கடுமையாக தாக்கி கிழித்து தொங்கவிட்ட விசிக பிரமுகர் – 2026இல் திமுக காலி என சபதம்

Posted by - February 14, 2025 0
மயிலாடுதுறையில் நடைபெற்ற விசிகவின் ஆர்ப்பாட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்து விசிக நிர்வாகி பேசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக ஆர்ப்பாட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர்…

“அண்ணாமலையை சும்மா விடுவோமா…? – உதயநிதி ஸ்டாலின்

Posted by - April 18, 2023 0
அண்ணாமலை மீது தானும் மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி. DMK Files என்ற பெயரில் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து பட்டியலை…

சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா ? விசாரணை நடத்த இ.பி.எஸ் வலியுறுத்தல்..!!

Posted by - May 8, 2024 0
சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா இல்லையா என்பதை நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி…

2026-ல் கப்பு முக்கியம் பிகிலு.. அரசியல் என்ட்ரி பற்றி மறைமுகமாக சொன்னாரா விஜய்?

Posted by - November 2, 2023 0
லியோ விஜய் அரசியலுகு வர போகிறார் என நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை விரிவுபடுத்தி அரசியலில் நுழைவதற்கான முதற்கட்ட பணிகளை விஜய் செய்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *