#RainAlert : அடுத்த 3 மணிநேரத்தில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

190 0

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்தில் 25 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்க உள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. பருவமழை நாளை தொடங்க உள்ளநிலையில் நேற்று இரவிலிருந்தே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் லேசான இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சிராப்பள்ளி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Post

கருவை கலைக்க சொல்கிறார், இரண்டு முறை தாக்கினார்.. CWC நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி புகார்

Posted by - August 29, 2025 0
குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் ஜாய் கிரிஸில்டா என்ற ஆடை…

ரஜினி இதெல்லாம் விட்டறலாமே.. ரசிகர்கள் கெட்டுட போறாங்க.. ஜானகி அம்மாவிடம் எம்ஜிஆர் வருத்தம்

Posted by - November 26, 2024 0
தமிழ் சினிமாவில் எம்.கே. தியாகராஜ பாகவதருக்குப் பின் சூப்பர் ஸ்டாராக ஜொலித்தவர் எம்.ஜி.ஆர். இவர் ரஜினியைப் பற்றி ஜானமி அம்மாவிடம் கூறிய சம்பவத்தை ரஜினி பகிர்ந்துள்ளார். முன்னாள்…

2025 முடிவுக்கு முன் Tamil Nadu-வில் நடந்த முக்கிய 10 மாற்றங்கள் – Technology, Health, Lifestyle updates!

Posted by - December 12, 2025 0
2025 முடிவுக்கு வந்துட்டோம். இந்த வருடம் technology, health, education, lifestyle, economy எல்லாத்திலும் பெரிய மாற்றங்கள் நடந்துது. Tamil Nadu-வில் இந்த வருடம் அதிகம் பேசப்பட்ட,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *