கருணாநிதி, ஸ்டாலினையே விஞ்சிய உதயநிதி! – எம்.எல்.ஏவாகி 19 மாதங்களில் அமைச்சர்!

133 0

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று 17 ஆண்டுகள் கழித்து 2006ல் தான் முதன்முறையாக அமைச்சரானார்.

சட்டமன்ற உறுப்பினரான 19 மாதங்களில் தமிழ்நாடு அமைச்சரவையில் அங்கம் வகிக்கப்போகிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில் வருகின்ற 14 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியானது. இதற்கான கடிதம் இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டடுள்ளது.மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 1957ல் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். இதனையடுத்து 10 ஆண்டுகள் கழித்து 1967ஆம் ஆண்டுதான் முதன்முறையாக பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று 17 ஆண்டுகள் கழித்து 2006ல் தான் முதன்முறையாக அமைச்சரானார். அப்போது அவருக்கு உள்ளாட்சி துறை வழங்கப்பட்டது.இந்நிலையில் 2022ல் முதன்முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் 19 மாதங்களில் அமைச்சராக உள்ளார். அவருக்கு திட்ட அமலாக்கத்துறை வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Post

‘இந்தி தெரியாது போடா’ என சொல்லிவிட்டு இப்ப ‘கேலோ இந்தியா’-வாம்… சூடு, சொரணை இல்லாத உதயநிதி – நடிகை விந்தியா விமர்சனம்

Posted by - January 29, 2024 0
திமுக இளைஞரணி மாநாடு பயனுள்ளதாக இல்லை என்றும், அது சர்க்கஸ் மாநாடு என அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா கிண்டலடித்துள்ளார். பழனியில் முன்னாள்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Posted by - September 2, 2024 0
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ஆவணி திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து சுவாமி, அம்பாள்…

எதிர்நீச்சலில் இவர் தான் இனி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பவரா??வெளியான Recent தகவல்!

Posted by - September 13, 2023 0
எந்த ஒரு கலைஞனும் சினிமாவில் நுழைந்த உடனே வெற்றியை காண்பது இல்லை என்று தான் சொல்லவேண்டும்…எல்லோருமே பல போராட்டங்களுக்கு பிறகு தான் பலரும் வெற்றிக்கனியை சுவைக்கிறார்கள் என்றே…

புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை – சிறுமியின் பெற்றோருக்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல்..!!

Posted by - March 7, 2024 0
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவத்திற்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி…

நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை

Posted by - February 20, 2025 0
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒருமையில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாஜக மாநில…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *