விஜய் மகன் ஜேசன் சஞ்சய்-யின் முதல் படம்.. கைவிட்ட அனிருத்? கைதூக்கிவிடும் மியூசிக் டைரக்டர்

184 0

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்துக்கு இசையமைப்பது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தன் தந்தை மாதிரி சினிமாவில் ஹீரோவாக வருவாரா என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அவர் இயக்குனரக விரும்பம் தெரிவித்து, அதற்காக முயற்சித்து வருகிறார்.

தன் தந்தை பிரபல இயக்குனர் என்பதால், தன் மீது விழுந்த வாரிசு நடிகர் என்பது தன் மகனுக்கு வரக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் நடிகர் விஜய், அவரது தன் சொந்த முயற்சிலேயே அவரை வாய்ப்பு தேடும் படி கூறியதாகத் தகவல் வெளியானது.

அதன் பின், லைகா ஜேசன் சஞ்சய்க்கு முதல் படத்தை இயக்க வாய்ப்பை லைகா நிறுவனம் கொடுத்தது. இதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்ட ஜேசன் சஞ்சய், சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த பின், கனடாவில் உள்ள திரைப்பட கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்..விஜயின் போக்கிரி படத்தில் வசந்த முல்லை பாட்டிலும், வேட்டைக்காரன் படத்தில் நா அடிச்சா தாங்க மாட்ட பாடலிலும் வந்து நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்த ஜேசன் சஞ்சய் குறும்படங்களும் இயக்கி கவனம் பெற்றார்.

விஜய் மகன் சஞ்சயின் முதல் படம் & இசையமைப்பாளர்

ஆனால், இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆகும் நிலையில், இப்படத்தின் காஸ்டிங், தொழில்நுட்ப கலைஞர்கள் என எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏன் இப்படம் தாமதம் ஆகிறது எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்துக்கு அனிருத் இசையமைப்பதாக இருந்த நிலையில் அவர் பல படங்களில் பிஸியாக இருப்பதால் இப்படத்திற்கு இசையமைக்க முடியாத சூழலில் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே விஜய்யின் ரசிகரும் அவரது வாரிசு படத்துக்கு இசையமைத்தவருமான தமன் தான் ஜேசன் சஞ்சயின் முதல் படத்துக்கு இசையமைக்கிறார் எனத் தகவல் வெளியாகிறது.

வரும் டிசம்பரில் இப்படத்தின் பூஜை போடப்பட்டு, ஜனவரியில் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு, அடுத்த ஆறு மாதங்களில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தில் துருவ் விக்ரம், அதர்வா, சந்தீப்கிசன் ஆகிய மூன்று பேர் நடிக்ககலாம் என கூறப்படுகிறது. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன் படக்குழு திரைக்கதையில் பிஸியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகிறது.

Related Post

விஜய்யுடன் மோதும் முன்னணி நடிகர்.. வசூலில் பாதிப்பு ஏற்படுமா

Posted by - August 21, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன்…

சுந்தர் சி வடிவேலு காம்போ இஸ் பேக்…கவலை மறந்து சிரிக்க வைக்கும் கேங்கர்ஸ்…முழு விமர்சனம் இதோ

Posted by - April 24, 2025 0
சுந்தர் சி , வடிவேலு நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் கேங்கர்ஸ் படத்தின் முழு விமர்சனம் இதோ கேங்கர்ஸ் சுந்தர் இயக்கி வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள…

துணிவு-வை முந்தும் வாரிசு.. தமிழகத்தில் தற்போதைய நிலைமை இதுதான்

Posted by - January 19, 2023 0
வாரிசு – துணிவு துணிவு மற்றும் வாரிசு இரு திரைப்படங்களும் வெளிவந்த நல்லபடியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் நாளில் இருந்து தமிழகத்தில் வாரிசு படத்தை விட துணிவு படம் அதிக…

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிரான மனு: விசாரிக்க மறுத்தது உச்சநீதிமன்றம்

Posted by - May 3, 2023 0
கேரள பெண்களை மையமாக வைத்து ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகிறது.…

லியோ படத்தின் பிசினஸ் மட்டும் இத்தனை கோடியா?. இது தான் தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறை

Posted by - July 25, 2023 0
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *