இவையெல்லாம் மாரடைப்புக்கான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்.. என்னென்ன தெரியுமா..?

60 0

 மாரடைப்பு அறிகுறிகள் பெரும்பாலும் ஆண்களில் ‘வழக்கமானவை’ என்றும், பெண்களில் ‘வித்தியாசமானவை’ என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு புதிய ஆய்வில் அறிகுறிகள் பாலினங்கள் இடையே வேறுபட்டாலும், ஓரு சில ஒற்றுமைகளும் இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

உலகளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் மாரடைப்பாகும். மாரடைப்பு திடீரென தாக்கும் திறன் கொண்டதாக உள்ளது. முன் அறிகுறிகள் ஏதுமின்றி திடீரென ஏற்படக்கூடியதாக மாரடைப்பு பிரச்னை உள்ளது.

ஒருவேளை வயிற்று எரிச்சல், நெஞ்சரிச்சல் மற்றும் செரிமானக் கோளாறு போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும், அதை பலரும் பெரிதாக எடுத்துகொள்வது கிடையாது. அந்த வகையில் மாரடைப்புக்கான சில எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து பார்க்கலாம். மாரடைப்பு அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் உங்கள் உயிரையோ அல்லது உங்களைச் சுற்றியுள்ள ஒருவரின் உயிரையோ காப்பாற்ற முடியும் என்று இதய நோய் நிபுணர் தெரிவித்துள்ளார்.

மாரடைப்பின் 7 ஆரம்ப அறிகுறிகள்:

  • உங்கள் மார்பில் அழுத்தம் அல்லது இறுக்கம் (வலிக்கு பதிலாக)
  • உங்கள் கைகள், தாடை, கழுத்து அல்லது முதுகு போன்ற பகுதிகளில் வலி
  • குளிர் அல்லது வியர்வை
  • நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம்
  • மூச்சுத் திணறல்
  • குமட்டல் அல்லது வாந்தி
  • அசாதாரண சோர்வு

இந்த அறிகுறிகளை நீங்கள் அலட்சியப்படுத்தினால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், உங்கள் இதயத்தில் உள்ள இரத்த நாளங்களில் ஒன்றில் அடைப்பு ஏற்படுவதால் மாரடைப்பு ஏற்படுகிறது. அடைப்பு ஏற்பட்டால் இரத்தம் உங்கள் இதயத்திற்கு செல்ல முடியாது. எனவே இரத்தம் இல்லாமல், உங்கள் இதய தசை இறக்கத் தொடங்குகிறது. எனவே இரத்த ஓட்டம் விரைவாக மீட்டெடுக்கப்படாவிட்டால், நிரந்தர இதய பாதிப்பு அல்லது மரணம் கூட ஏற்படலாம்.

ஆண்களை விட பெண்களுக்கு எச்சரிக்கை அறிகுறிகள் வேறுபட்டதா?

மாரடைப்பு அறிகுறிகள் பெரும்பாலும் ஆண்களில் ‘வழக்கமானவை’ என்றும், பெண்களில் ‘வித்தியாசமானவை’ என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு புதிய ஆய்வில் அறிகுறிகள் பாலினங்கள் இடையே வேறுபட்டாலும், ஓரு சில ஒற்றுமைகளும் இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

  • மாரடைப்புக்கு முன் மூச்சுத் திணறல், சோர்வு மற்றும் தூக்கமின்மை.
  • முதுகு, தோள்கள், கழுத்து, கைகள் அல்லது வயிற்றில் வலி.
  • குமட்டல் மற்றும் வாந்தி.இது பெண்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்தும் ஆபத்து அறிகுறிகளாகும். மாரடைப்புக்கு பொதுவான அறிகுறியான மார்பு வலி போன்ற உணர்வு அல்லது அஜீரணம் போன்ற அசௌகரியம் ஆகியவை பெண்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாரடைப்பிற்குப் பிறகு இறப்பதற்கான வாய்ப்புகள், ஆண்களை விட பெண்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • மாரடைப்புக்கான ஆபத்து காரணங்கள்:
    • உடல் பருமன்
    • நீரிழிவு நோய்
    • புகைப்பிடித்தல்
    • இதய நோய் அல்லது முந்தைய மாரடைப்பின் வரலாறு
    • உயர் இரத்த அழுத்தம் அல்லது அதிக கொழுப்பு
    • மாரடைப்பின் குடும்ப வரலாறுஉங்களுக்கு மார்பு வலி அல்லது அழுத்தம் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் அல்லது அது மீண்டும் வந்தால் 911 அல்லது உள்ளூர் அவசர எண்ணை அழைக்க வேண்டும்.

Related Post

சீனாவில் வேகமெடுக்கும் வைரஸ் பரவல்… மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

Posted by - November 28, 2023 0
கொரோனா தொற்றின் போது கடைபிடிக்கப்பட்ட கண்காணிப்புக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை செயல்படுத்த வேண்டும். சீனாவில் குழந்தைகளிடையே பரவி வரும் மர்ம காய்ச்சல் எதிரொலியாக , மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை…

அமெரிக்காவில் எலும்பை உறைய வைக்கும் குளிர்.. சமாளிக்க முடியாமல் 22 பேர் பலி!

Posted by - December 27, 2022 0
கடும் பனியுடன் மணிக்கு 65 மைல் வேகத்தில் காற்றும் வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம் அமெரிக்காவில் வீசும் பனிப்புயலால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில்…

வங்காளதேசத்தில் தீப்பிடித்து எரிந்த ரெயில்: 5 பேர் உடல் கருகி பலி

Posted by - January 6, 2024 0
வங்காளதேசம் நாட்டின் தலைநகர் டாக்காவிற்கு நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஜேஸ்சோர் நகரில் இருந்து பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த ரெயிலில் தீப்பிடித்தது.…

துருக்கியை தொடரும் சோகம் – சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் பலி

Posted by - February 21, 2023 0
அங்காரா: தெற்கு துருக்கி – சிரியாவின் எல்லையில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது என…

பணியின்போது அரசு அதிகாரிகள் ஐ போன் பயன்படுத்த தடை – சீனா அதிரடி

Posted by - September 7, 2023 0
பீஜிங்: உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடு. சீனாவிலும் ஐ-போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சீனர்களில் பலரும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *