விவாகரத்து கொடுக்க மறுத்த கணவன் – கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி கைது!

37 0

கள்ளக்குறிச்சி மாவட்டம், சோழவரம் அருகே கூலிப்படையை ஏவி, கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார் ஓட்டுநர் ராமகிருஷ்ணனின் மனைவி சிவகாமி, தனக்கு விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு, அவரது கணவர் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த 28 -ஆம் தேதி சிவகாமி செல்போனில் அழைத்தன் பேரில், அவரது கணவர் ராமகிருஷ்ணன் சோழவரம் சென்றுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த 3 பேர் ராமகிருஷ்ணனை கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில், படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகள் உதவியோடு விசாரணை நடத்திய போலீசார், விவாகரத்து கொடுக்க மறுத்ததால் அவரது மனைவியே இச்செயலில் ஈடுபட்டுள்ளார் என கண்டறிந்தனர். மேலும், இது தொடர்பாக, சிவகாமி, சென்னையைச் சேர்ந்த நவீன், கெல்வின் ராஜ் மற்றும் நித்திஷ் ராஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Related Post

சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!

Posted by - November 7, 2024 0
41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது என அதிமுக…

ஊதுவத்தி கம்பெனியில் ரூ.10 கோடி பொருட்கள் நாசம்- வானில் இருந்து விழுந்த எரி கற்களால் தீ விபத்து

Posted by - April 19, 2023 0
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவர், தெக்குப்பட்டு பகுதியில் ஊதுவத்தி தொழிற்சாலை பெரிய அளவில் நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை…

சென்னை ஓட்டுநர் வங்கி கணக்கில் டெபாசிட் ஆன 9 ஆயிரம் கோடி ரூபாய்…!

Posted by - September 21, 2023 0
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் ஓட்நர் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆன சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த 9-ந்தேதி திடீரென அவரது…

முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் சிக்கலா…மாட்டிக்கொண்டு முழிக்கும் செந்தில் பாலாஜி…

Posted by - May 31, 2023 0
கோவையில் கோல்டு வின்ஸ் பகுதியில் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் நடைபெற்று வந்த சோதனை காலை 8.15 மணி அளவில் நிறைவு பெற்றது.   மின்சாரம்…

உக்கிரமா இருக்கும்.. தென் மாவட்டங்களில் மீண்டும் அதிகனமழைக்கு வாய்ப்பு! 3 நாட்கள் அலர்டா இருங்க

Posted by - December 26, 2023 0
சென்னை: தென் மாவட்டங்களில் மீது அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் எச்சரித்து உள்ளார். ராஸ்பி அலைவு கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *