Tamilnadu Ministers department | 10 அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
தமிழ்நாட்டின் 10 அமைச்சர்களின் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை
கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி அதே துறையை கவனிப்பார்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த கே.ஆர்.பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அதே துறையே கவனித்து வருவார்.
வனத்துறை அமைச்சராக இருந்த கே.ராமச்சந்திரனுக்கு சுற்றலாத்துறை ஒதுக்கீடு
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அதே துறையையே கவனிப்பார்.
இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதே துறையே கவனிப்பார். கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தை கவனிப்பார்.
நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதே துறையையே கவனிப்பார். கூடுதலாக ஓய்வூதியம், ஓய்வு கால நன்மைகள் மற்றும் புள்ளியியல் துறையை கவனிப்பார்.
சுற்றுசூழல் மற்றும் இளைஞர்நலன், விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன் சுற்றுச்சூழல் துறை மட்டுமே கவனிப்பார்.
சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.