“விரைவில் துணை முதலமைச்சராவார்”- உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த சீமான்

162 0

இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில் துணை முதலமைச்சராக கூட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில் துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் மாணவர்களுக்கான சிறப்பு அமர்வு நடைபெற்றது இதில் கலந்துகொண்ட சீமான், மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது மத்திய அரசு இந்தி திணிப்பு குறித்து கண்டனம் தெரிவித்து பேசிய அவர், மற்ற மொழிகளை கற்பதைதான் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் மொழிகளை திணிப்பதை மட்டுமேதான் தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் தெரிவித்தார்

மேலும் முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு எதற்கு என்று கேள்வி எழுப்பியவர், இட ஒதுக்கீடு வேண்டும் எனில் அவர்கள் பின் தங்கிய வகுப்புக்கு தங்களை மாற்றிக் கொள்ளட்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளரிடம் பேசிய சீமானிடம் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்து பேசியவர் இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில் துணை முதலமைச்சராக கூட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அமைச்சராக பதவி ஏற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு சீமான் வாழ்த்து தெரிவித்தார்.

Related Post

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வருக்கு செந்தில் பாலாஜி உருக்கமான கடிதம் …

Posted by - February 13, 2024 0
சிறையில் இருந்துகொண்டே இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சரவையில் நீடித்து வந்த செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக…

கட்சிக்கு செல்போன் செயலி.. வீடியோவில் வந்து கோரிக்கை வைத்த நடிகர் விஜய்!

Posted by - March 8, 2024 0
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் இன்று மாலை அறிமுகப்படுத்தினார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான…

சர்க்கரை நோயாளிகள் பிஸ்தா சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா அவங்க உடலில் என்ன நடக்குமாம் தெரியுமா?

Posted by - December 26, 2023 0
பிஸ்தா மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான நட்ஸ் வகைகளில் ஒன்றாகும். கூடுதலாக, எந்தவொரு ஆரோக்கியமான உணவுக்கும் இது ஒரு நல்ல கூடுதலாக இருக்கும். உங்கள் இரத்தத்தில் உள்ள…

போட்டி போட்டு ட்ரெண்ட் செய்யும் மத்திய மாநில ஆளும் கட்சிகள்.. பந்தயத்துக்கு நாங்க வரலாமா, TVKForTN

Posted by - February 22, 2025 0
சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அதுவும்  கெட் அவுட் மோடி என்ற ஹாஷ் டேக் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்தது. திமுக கட்சியினருக்கு…

மின் கட்டண உயர்வு: அண்ணாமலை கண்டனம்!

Posted by - July 16, 2024 0
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *