“நான் முதலமைச்சராக இருக்கும் வரை இதற்கு அனுமதிக்க மாட்டேன்” – சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

49 0

அதையும் மீறி வந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தான் முதலமைச்சராக இருக்கும் வரையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி கொடுக்க மாட்டேன் என்றும், அதையும் மீறி வந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதுரை அரிட்டாபட்டியில் மத்திய அரசு வழங்கியிருக்கும் டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசினர் தீர்மானம் கடும் விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்க ஏலம் தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்து அனுமதி வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது என பேசினார். 2022 ஆம் ஆண்டு தமிழக அரசு பல்லுயிர் தளமாக அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய நிலையிலும், சுரங்க அனுமதி மத்திய அரசால் வழங்கப்பட்டிருப்பதாகவும், அதனை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் எனவும் அவர் கூறினார். எனவே சுரங்க அனுமதியை திரும்பப் பெறுவதோடு, இனி வரும் காலங்களில் மாநில அரசின் அனுமதியின்றி திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்கக் கூடாது என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் துரைமுருகன் பேசினார்.இதனைத்தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன், மதிமுக, விசிக, பாமக, மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அரசினர் தீர்மானத்திற்கு முழு ஆதரவை தெரிவித்தனர்.  தொடர்ந்து பேசிய பாஜக சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், சுரங்கம் ஏலம் தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசிடம் விளக்கம் கேட்கும்போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் இந்த திட்டம் வந்திருக்காது என பேசினார். மேலும் இந்த சுரங்க ஏலம் தொடர்பாக மத்திய அமைச்சரிடம் தமிழக பாஜக பேசியிருப்பதாகவும், மக்களின் விருப்பப்படி நல்ல முடிவு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.இதையடுத்து, பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, 2023 ஆம் ஆண்டே சுரங்க ஏலம் தொடர்பான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு எழுதிய கடிதத்திற்கு போதிய எதிர்ப்பை மாநில அரசு தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் வரும்போதே திமுக எம்.பி.க்கள் போதிய அழுத்தம் கொடுக்கவில்லை எனக்கூறிய எடப்பாடி பழனிசாமி, 2023 ஆம் ஆண்டு துரைமுருகன் எழுதிய கடிதத்தின் விவரங்களையும் வெளியிடவில்லை எனவும் பேசினார்.அதற்கு பதிலளித்து பேசிய துரைமுருகன், ஏலம் விடும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே இருக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்திருத்தம் சுய மரியாதைக்கு சவால் விடுக்கும் செயல் எனவும், நில உரிமைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தம் மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்திருப்பதாக கடிதம் எழுதியதாக கூறினார்.பின்னர் பேசிய முதல்வர், இந்த திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், மத்திய அரசு ஏலமே விட்டிருந்தாலும் இந்த திட்டத்தம் நான் முதலமைச்சராக இருக்கும் வரை செயல்படுத்த விட மாட்டேன் எனவும், அதையும் மீறி வந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் எனவும் சூளுரைத்தார். கடும் விவாதத்திற்கு பிறகு அரசினர் தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்த பிறகு ஒருமனதாக தீர்மானம் நிறைவேறுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Related Post

ஒரே மாசத்துல உங்க உடல் எடையை குறைக்கணுமா? அப்ப இந்த 5 விஷயத்தை டெய்லி ஃபாலோ பண்ணுங்க..!

Posted by - November 29, 2023 0
உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் சவாலான பணி. யாராலும் எளிதாக உடல் எடையை குறைத்து விட முடியாது. உடல் எடையை குறைப்பதற்கு சீரான உணவுகள், உடற்பயிற்சி…

உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?

Posted by - April 25, 2024 0
தற்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது தான் உண்மை. அதேபோல் இந்தியா முழுவதும் கூகுள் பே…

அமராவதி ஆற்றுப்படுகையை பாலைவனமாக்கும் கேரள அரசின் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்! – டிடிவி தினகரன்

Posted by - May 20, 2024 0
கேரள அரசால் கட்டப்படும் புதிய அணையால் திருப்பூர், கரூரில் விவசாயம் மட்டுமல்லாது குடிநீர் பஞ்சமும் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவிடமும் தமிழகத்தின் உரிமையும், விவசாயிகளின்…

சூடான, சுவையான ‘பாப்கார்ன்’ உடல் எடை அதிகரிக்குமா? popcorn

Posted by - December 2, 2022 0
பாப்கார்ன்’ (popcorn)சாப்பிட, பெரியவர்கள்-சிறியவர்கள் என்ற வித்தியாசம் தேவையில்லை. பொரித்து, அவித்து, வறுத்து மக்காச்சோளம் சாப்பிடப்படுகிறது. சாதாரண ஒரு கோப்பை பொரித்த மக்காச்சோளத்தில் (பாப்கார்ன்) 31 கலோரி ஆற்றலே…

வெந்தயக்கீரை.. மளமளன்னு உடல் சதை கரையணுமா? சர்க்கரை நோயாளிகள் வெந்தயக்கீரையை மட்டும் விட்றாதீங்க

Posted by - August 30, 2023 0
சென்னை: வெந்தயக்கீரை மட்டுமல்ல, இந்த செடியின் விதைகள், தண்டுகள் என அனைத்துமே மருத்துவமும், மகத்துவமும் நிறைந்தவையாகும். இந்த கீரையின் விதைகளின் கருவில் காலக்டோமன்னை காணப்படுகிறது. இளம் விதைகளில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *