வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்… இனி க்ரூப் சாட்டில் எவ்வளவு பேர் ஆன்லைனில் இருக்காங்கன்னு பார்க்கலாம்…

55 0

குரூப் சாட் செய்யும்போது க்ரூப்பில் ஆன்லைனில் உள்ளவர்களின் எண்ணிகையை பார்க்கும் வசதியை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

பிரபல வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியானது முக்கியமான இரண்டு புதிய வசதிகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. குரூப் சாட் செய்யும்போது க்ரூப்பில் ஆன்லைனில் உள்ளவர்களின் எண்ணிகையை பார்க்கும் வசதியையும், ஏதேனும் மெசேஜ் ரீட் செய்யாமல் இருந்தால் அதனை நினைவுப்படுத்தும் வசதியையும் வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் யூசர்களின் சாட் அனுபவம் மேம்படும் என வாட்ஸ் அப் நம்புகிறது.

ஆன்லைன் கவுன்ட்டர் ஃபார் குரூப் சாட்ஸ் (Online counter for group chats)வாட்ஸ் அப்பின் சோதனை நிலையில் உள்ள இந்த அப்டேட் மூலம் ஒரு குரூப் சாட்டில் எத்தனை பேர் தற்போது ஆன்லைனில் உள்ளனர் எனும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. வாட்ஸ் அப்பின் லேட்டஸ்ட் பீட்டா வெர்ஷன் ஆன வாட்ஸ்அப் பீட்டா ஃபார் ஆண்ட்ராய்டு 2.4.25 30 வெர்ஷனில் இந்த அப்டேட் சோதனை முறையில் உள்ளது. குரூப் சாட்டின் மேற்புறத்தில் கீழேயும் குரூப் பெயரின் சற்று கீழேயும் எந்த ஆன்லைன் கவுண்டர் எண்ணிக்கை காண்பிக்கப்படும்.

இந்த ஆன்லைன் கவுண்டரில் எத்தனை நபர்கள் தற்போது ஆன்லைனில் உள்ளனர் என்ற விவரம் காண்பிக்கப்படும். இதனைக் கொண்டு சில முக்கியமான செய்திகளை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்கு ஏற்ற நேரத்தை நம்மால் தேர்வு செய்ய முடியும். அதே நேரத்தில் யூசர்களின் பிரைவசியை மதிக்கும் பொருட்டு, ஆன்லைன் செயல்பாட்டை மறைக்கும் வசதியையும் வாட்ஸ்அப் அளிக்கிறது. இவ்வாறு ஆன்லைன் விசிபிலிட்டியை யாரேனும் மறைத்திருந்தால், அவர்கள் ஆன்லைனில் இருந்தாலும் அவர்களின் பெயர் குழுவில் ஆன்லைனில் காண்பிக்காது.

இந்த புதிய அப்டேட்டில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளன. அதாவது ஒரு நபர் வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்து அவரின் இன்டர்நெட் கனெக்ஷன் ஆக்டிவாக இருந்தால் அவர் ஆன்லைனில் உள்ளதாக வாட்ஸ் அப் எடுத்துக் கொள்ளும். அதனைக் கொண்டு அவர் ஆக்டிவாக சாட் செய்து கொண்டிருக்கிறார் என்று நாம் கருத முடியாது என்பதனை நினைவில் கொள்ளவும்.

ரு குழுவாக சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் அல்லது நிகழ்வுகளுக்கு இந்த வசதி மிகவும் உபயோகமானதாக இருக்கும். குழுவிலுள்ள பலருக்கும் ஒரு செய்தி சென்றடைய வேண்டும் எனும் பட்சத்தில் அனைவரும் ஆன்லைனில் இருக்கும்போது நீங்கள் இதனைப் பற்றி பேசி முடிவு செய்து கொள்ளலாம்.

மெசேஜ் ரிமைண்டர்

ஆன்லைன் கவுன்ட்டர் வசதியை அடுத்து இரண்டாவதாக அன்ரீடில் உள்ள மெசேஜ்களுக்கான நோட்டிபிகேஷன் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வசதியும் மேலே சொன்ன ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் சோதனை முறையில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஏற்கனவே நாம் பார்க்காத ஸ்டேட்டஸ் அப்டேட்டுகள் மேலே முதலில் காண்பிக்கப்படுவதுபோல, இந்த புதிய அப்டேட்டில் இதுவரை நாம் படிக்காத வாட்ஸ் அப் மெசேஜ்கள் முதன்மையாக காண்பிக்கப்படும் என்று வாட்ஸ் அப் அறிவித்துள்ளது. இதன் மூலம் சில முக்கியமான செய்திகளை நீங்கள் தவற விடுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறையும்.அதிகமாக சாட் செய்யும் நபர்கள் அல்லது மெசேஜை அடிக்கடி படிக்காமல் தவறவிடும் நபர்களுக்கு இந்த அப்டேட் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

Related Post

Extra-Marital Affair | பெண்கள் ஏன் திருமணத்தை கடந்த உறவைத் தேர்வு செய்கிறார்கள்? – 5 காரணங்கள்.!

Posted by - December 3, 2022 0
தன் கணவருடன் பாலியல் உறவு மிக மிக கொடுமையாக இருந்ததுதான் ஒரே காரணம் என்று ஒரு பெண் தெரிவித்திருக்கிறார். பல முறை முயற்சி செய்தும் கூட, அந்த…

வீழ்த்தப்பட்ட 800 ஆண்டு பழமையான இனம்! உலகை அதிர வைத்த 21 வயது பெண் எம்பி! இது மாவோரி இனத்தின் வரலாறு

Posted by - January 6, 2024 0
வெலிங்டன்: நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மாவோரி இனத்தைச் சேர்ந்த 21 வயது பெண் முழக்கமிட்ட வீடியோ டிரெண்டாகியுள்ள நிலையில், இந்த மாவோரி இன மக்கள் யார்.அவர்கள் வரலாறு என்ன…

படுக்கையில் சிறுநீர் கழித்த காதலன்.. கடுப்பான காதலி.. கத்திக்குத்தில் முடிந்த பிரேக் அப் பார்ட்டி.!

Posted by - January 21, 2023 0
படுக்கையிலேயே சிறுநீர் கழித்த ஆத்திரத்தில் இளைஞரை அவரது காதலி கத்தியால் குத்திய சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் ஈஸ்ட் படேன் ரோக் பகுதியில் வசிப்பவர்…

தொடரும் வார்..!!

Posted by - March 1, 2022 0
யுக்ரைன் மீதான புதினின் தாக்குதல் தொடர்ந்து 6 ஆவது நாளாக இன்றும் நீடித்துள்ளது… பல நாடுகள் பல தடைகளை ரஷ்யா மீது விதிப்பு…இந்தியா யுக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில்…

இவையெல்லாம் மாரடைப்புக்கான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்.. என்னென்ன தெரியுமா..?

Posted by - November 26, 2024 0
 மாரடைப்பு அறிகுறிகள் பெரும்பாலும் ஆண்களில் ‘வழக்கமானவை’ என்றும், பெண்களில் ‘வித்தியாசமானவை’ என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு புதிய ஆய்வில் அறிகுறிகள் பாலினங்கள் இடையே வேறுபட்டாலும், ஓரு சில…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *