ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) என்பது ஒரு பொதுவான சுவாச வைரஸ் ஆகும். இது கீழ் மற்றும் மேல் சுவாச நோய்த்தொற்றுகளை (சளி போன்றது) ஏற்படுத்துகிறது. இது பொதுவாக குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தின் துவக்கத்தில் ஏற்படும் ஒரு பருவகால நோயான காய்ச்சல் போன்றது.
ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) என்றால் என்ன?
ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) என்பது ஒரு பொதுவான சுவாச வைரஸ் ஆகும். இது கீழ் மற்றும் மேல் சுவாச நோய்த்தொற்றுகளை (சளி போன்றது) ஏற்படுத்துகிறது. இது பொதுவாக குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தின் துவக்கத்தில் ஏற்படும் ஒரு பருவகால நோயான காய்ச்சல் போன்றது.
HMPV ஒரு புதிய வைரஸா?
HMPV என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் அல்ல. இது முதன்முதலில் 2001-ல் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், 1958-ம் ஆண்டு முதல் இந்த வைரஸ் பரவலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
HMPV, கோவிட்-19 வைரஸ் போன்றதா?
ஆம். கொரோனா வைரஸ் நோய் அல்லது கோவிட்-19 என்பது SARS-CoV-2 வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். HMPV வைரஸ் மற்றும் SARS-CoV-2 வைரஸ் சில வழிகளில் ஒத்தவை:
இரண்டு வைரஸ்களும் எல்லா வயதினருக்கும் சுவாச நோய்களை ஏற்படுத்துகின்றன. இளம் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.
இரண்டின் அறிகுறிகளும் ஒன்று போலவே உள்ளது. இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை HMPV உடன் தொடர்புடைய அறிகுறிகளாகும். கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடமும் இந்த அறிகுறிகள் இருக்கும்.இரு வைரஸ்களும் இருமல் மற்றும் தும்மல் மற்றும் நெருங்கிய தொடர்பு மூலம் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. வைரஸ்கள் உள்ள பொருள்கள் அல்லது மேற்பரப்புகளைத் தொட்டு, பின்னர் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுவதன் மூலமும் அவை பரவுகின்றன.இரு வைரஸ்களும் இருமல் மற்றும் தும்மல் மற்றும் நெருங்கிய தொடர்பு மூலம் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. வைரஸ்கள் உள்ள பொருள்கள் அல்லது மேற்பரப்புகளைத் தொட்டு, பின்னர் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுவதன் மூலமும் அவை பரவுகின்றன.
HMPV பரவுவதைத் தடுக்க தடுப்பூசி உள்ளதா?
இல்லை. தற்போது வரை தடுப்பூசி எதுவும் இல்லை. வைரஸ் தடுப்பு சிகிச்சையும் பரிந்துரைக்கப்படவில்லை. ஆனால் நோயாளிகள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் HMPV மற்றும் பிற சுவாச வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க உதவலாம்:
குறைந்தது 20 வினாடிகளுக்கு சோப்பு மற்றும் தண்ணீரால் அடிக்கடி கைகளை கழுவவும்
கழுவப்படாத கைகளால் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.
சளி போன்ற அறிகுறிகள் உள்ள நோயாளிகள் இருமல் மற்றும் தும்மலின் போது தங்கள் வாய் மற்றும் மூக்கை மூட வேண்டும்.
பாத்திரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதையும், மற்றவர்களுடன் அதில் சாப்பிடுவதையும் தவிர்க்கவும்.
HMPV பரவல்: இந்தியா கவலைப்பட வேண்டுமா?
தற்போதைய நிலைமை குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்களை சுகாதார சேவைகளின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் அதுல் கோயல் கேட்டுக்கொண்டார்.
பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். அதாவது, இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்குமாறும், நோய் பரவுவதைத் தடுக்கவும், சளி மற்றும் காய்ச்சலுக்கு பரிந்துரைக்கப்படும் சாதாரண மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் கோயல் கூறியுள்ளார்.