LIK | எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது..
‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Lover Insurance Kompany) என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார்.எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நடித்துள்ளார். அவர் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் சீமான் தாடியுடன் சிரிப்பது போலவும், அவருக்கு அருகில் பிரதீப் ரங்கநாதன் அமர்ந்திருப்பது போலவும் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.