மாவட்ட ஆட்சியரை அவமதித்த உதயநிதி! : அண்ணாமலை கண்டனம்

23 0

இன்பநிதி நண்பர்களுக்காக கலெக்டரை நிற்க வைத்த அமைச்சர் மூர்த்தி!

திமுகவின் மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

துணை முதலமைச்சர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 – 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம்.

முதலமைச்சர் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்? துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Related Post

தேர்தலுக்கு பின் கழகத்திலும் அரசியலிலும் பல மாற்றங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

Posted by - February 23, 2024 0
பிப்ரவரி 26ஆம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடுவீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ளப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜகவின் அநீதிகளை மக்களிடம் கொண்டு…

இந்த ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

Posted by - January 27, 2024 0
சிவகங்கை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு, வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

எண்ணூர் அருகே வாயுக்கசிவு ஏற்பட்டு மூச்சுத்திணறல்: அச்சத்தால் கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்

Posted by - December 27, 2023 0
சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு துறைமுகத்தில் இருந்து அமோனியா திரவ வாயு கடலுக்கு அடியில்…

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் ‘அய்யன்’ மொபைல் செயலி: DOWNLOAD APP LINK.

Posted by - December 26, 2023 0
சென்னை: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்நிலையில், மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் ‘அய்யன்’…

கோவில்களுக்குள் செல்போன், கேமராக்கள் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது- அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - September 2, 2023 0
சென்னை: பழனி தண்டாயுதபாணி கோவில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என ஒரு படம் சமூக வலைதளங்களில் உலாவி வருவதாக சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *