நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!

25 0

சஞ்சய் ராய் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தண்டனை விவரம் இன்று (திங்கள் கிழமை) அறிவிக்கப்பட்டது.

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. அபராதம் ரூ.50 ஆயிரமும் விதிக்கப்பட்டு உள்ளது.

கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

சஞ்சய் ராய் குற்றவாளி

நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த சஞ்சய் ராய் குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து அடுத்த நாளே அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு சென்றது.

விசாரணையில் சஞ்சய் ராய் மீது பாலியல் வன்கொடுமை, கொலை தொடர்பாக சஞ்சய் ராய் மீது குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. இந்த வழக்கின் மொத்த விசாரணையும் மூடிய அறைக்குள் கேமரா பதிவுடன் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், சிபிஐ, போலீஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், தடயவியல் நிபுணர்கள், ஊழியர்கள் என 50 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டன. கிடைத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பில் சஞ்சய் ராய் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தண்டனை விவரம் இன்று (திங்கள் கிழமை) அறிவிக்கப்பட்டது. இதன்படி, குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. அபராதம் ரூ.50 ஆயிரமும் விதிக்கப்பட்டு உள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் கொல்கத்தா சியால்டா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Related Post

ஆந்திராவில் ரூ.30 லட்சத்துக்கு தக்காளி விற்ற வியாபாரி கொலை

Posted by - July 13, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், மதனப்பள்ளி அருகே உள்ள போடிமல்லதின்னா கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி. இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் தக்காளி பயிரிட்டு சந்தையில் விற்பனை செய்து…

ஜெய்ப்பூரில் நில அதிர்வு- ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

Posted by - July 21, 2023 0
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம்…

தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை… இந்த 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Posted by - November 3, 2023 0
புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 6ந்தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு…

5 நிமிட ஜாலிக்காக இது தேவையா!! போலீஸார் செய்த தரமான செயல் – இணையத்தில் வைரலாகிய வீடியோ!

Posted by - August 28, 2023 0
இணைய மோகம் யாரை தான் விட்டு வைத்தது. உயர் தரத்திலான கேமராக்களை கொண்ட மொபைல் போன்கள் வந்த பிறகு அன்றாட வாழ்நாளில் செய்யும் அனைத்தையும் காட்சிப்படுத்தி இணையத்தில்…

ஆந்திராவில் கிராமங்களில் மீன் மழை- ஆச்சரியத்துடன் அள்ளிச் சென்றனர்

Posted by - July 21, 2023 0
திருப்பதி: ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வஜ்ரபு கொட்டூர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *