உலகுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு; ’’இங்குதான் இரும்பின் காலம் தொடங்கியது’’ பெருமிதத்துடன் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

32 0

தமிழ் நிலப்பரப்பில்தான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற ஆய்வுப் பிரகடனத்தை அறிவிப்பதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார்.

இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார். தொடர்ந்து கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். மற்றும் கீழடி இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

’’தமிழ் நிலப்பரப்பில்தான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற ஆய்வுப் பிரகடனத்தை அறிவிக்கிறேன். சுமார் 5300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகம் ஆகியுள்ளது. கி.மு. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பகுப்பாய்வு முடிவுகள் ஆய்வாளர்களுக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது.

உலக அளவில் இரும்புத் தாதுவில் இருந்து இரும்பைப் பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் தமிழ்நாட்டில்தான் தொடங்கியது. இது தமிழும் தமிழ் இனத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த பெருமை’’ என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Post

“மயிலாடுதுறையில் நான் போட்டியிடவில்லை” – பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் கூறியது என்ன? – MaKa Stalin

Posted by - March 25, 2024 0
 PMK Candidate: சிலர் 100 ரூபாய், 200 ரூபாய் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என கனவு காணுகிறார்கள் என மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குற்றம்…

10 அமைச்சர்களின் துறை மாற்றம்.. எந்த அமைச்சர் என்ன துறை?

Posted by - December 14, 2022 0
Tamilnadu Ministers department | 10 அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் 10 அமைச்சர்களின் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு…

தி.மு.க. எம்.பி ஆ.ராசாவுக்கு சிபிஐ சம்மன்

Posted by - November 29, 2022 0
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆ.ராசாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆ.ராசா உள்பட 3 பேர் ஜனவரி 10-ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. சென்னை:…

குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று காலை முதல் அனுமதி- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Posted by - June 20, 2023 0
தென்காசி: தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுவது தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் ஆகும். தென்மேற்கு பருவமழை காலங்களில்…

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : சொந்த வீடு.. கார் என கோடிகளில் புரளப்போகும் ராசிகள்!

Posted by - April 20, 2023 0
guru peyarchi 2023 date : சோபகிருது வருடம் சுசித்திரை மாதம் 9 ஆம் தேதி (ஏப்ரல் 22, 2023) சனிக்கிழமை அன்று இரவு 11.24 மணிக்கு அசுவதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *