ஏர்டெல் ரூல்ஸ்.. இனிமே ரூ.20 இல்லனா.. SIM கார்டு டீஆக்டிவ்.. 90 நாட்களுக்கு குறி.. கால்கள், எஸ்எம்எஸ், டேட்டா!

33 0

ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் அவர்களது சிம் கார்டு மூலம் 90 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை பயன்படுத்தவில்லை என்றால், உங்களது சிம் கார்டு டீஆக்டிவேட் (SIM Card Deactivate) செய்யப்பட இருக்கிறது. இதில் இருந்து தப்பிக்க ரூ.20 ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதுவும் 30 நாட்களுக்கு மட்டுமே டீ-ஆக்டிவேட்டில் இருந்து காப்பாற்றும். இந்த ஏர்டெல் சிம் கார்டு விதிகள் (Airtel SIM Card Rules) என்ன சொல்கிறது? ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் இப்போது என்ன செய்யலாம்?இந்த விதிகள் புதிதாக வந்தது, கிடையாது. டிராய் (TRAI) என்று சொல்லப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது அமல்படுத்தி விதிகளையே இப்போது ஏர்டெல் கஸ்டமர்களுக்கு விளக்கி இருக்கிறது. இது டெலிகாம்டாக் தளத்தில் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விதிகள் என்ன சொல்கிறது என்பதை முதலில் பார்ப்போம்.ஏர்டெல் கஸ்டமர்கள் அவர்களது சிம் கார்டில் 90 நாட்களாக வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் டேட்டாவை பயன்படுத்தவில்லை என்றால், இந்த விதிகளின்படி அந்த சிம் கார்டு டீஆக்டிவேட் செய்யும் நிலைக்கு தள்ளப்படும். அந்த 90 நாட்களுக்கு மேல் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும். இந்த அவகாசத்துக்குள் நீங்கள் வழக்கமாக செய்யும் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். அப்படி இல்லாதபட்சத்தில் உங்களது சிம் கார்டை டீஆக்டிவேட் செய்ய ஏர்டெல் நிறுவனத்துக்கு உரிமை இருக்கிறது. அதன்பிறகு உங்களது மொபைல் நம்பரும் வேறொரு கஸ்டமர்களுக்கு ஏர்டெல் நிறுவனத்தால் வழங்க முடியும். இதை தடுத்து வைக்க ஒரு வழி இருக்கிறது. அதாவது, ரூ.20 டாக்டைம் உங்களுக்கு சிம் கார்டில் இருந்தால், அந்த 90 நாட்களுக்கு பிறகு கூடுதலாக 30 நாட்கள் அவகாசம் கிடைக்கும்.

Related Post

கோவிலுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபரை கன்னத்தில் அறைந்த பக்தர்- பயங்கரவாத தடுப்பு ஒத்திகையில் பரபரப்பு

Posted by - August 9, 2023 0
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் உள்ள சுவாமி நாராயண் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர்…

அய்யோ.. மீண்டும்.. மீண்டுமா? – சீனா செய்த பகீர் சம்பவம்.. புலம்பும் மக்கள்

Posted by - November 24, 2023 0
சீனாவில் நிமோனியா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு கண்காணிப்பு தகவல்களை பகிரும்படி WHO வலியுறுத்தல். சீனாவின் வடக்கு பகுதிகளில் குழந்தைகளுக்கு நிமோனியா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்து…

ஒடிசாவில் விபத்தில் சிக்கிய ரெயில் பெட்டியில் பிண வாடையா?: புதிய பரபரப்பு

Posted by - June 10, 2023 0
புவனேசுவரம் : ஒடிசாவில் பாலசோர் அருகே கடந்த 2-ந்தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயில், மற்றொரு சரக்கு ரெயில் என 3…

இன்று டிவிடெண்ட் வழங்கும் 19 பங்குகள்…. இந்த பங்குகள் உங்களிடம் உள்ளதா?

Posted by - August 21, 2024 0
இன்று டிவிடெண்ட் வழங்கும் 19 பங்குகள்…. இந்த பங்குகள் உங்களிடம் உள்ளதா?2024-25ம் நிதியாண்டின் காலாண்டு முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் பல நிறுவனங்களும் தங்களின் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட்…

பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…

Posted by - November 26, 2022 0
பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று காலை 11.56 மணிக்கு கவுண்ட்டவுனை நிறைவு செய்துவிட்டு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ராக்கெட்டும், செயற்கைகோள்களும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *