“மத்திய – மாநில அரசு உறவு” முக்கிய முடிவை அறிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

183 0

இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் வரும் மார்ச் 14ஆம் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடர், தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்வதுடன் மத்திய – மாநில அரசு தொடர்பான சில முக்கிய முடிவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசுக்கும் மத்திய அரசுசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், தன்னுடைய முடிவை அமைச்சரவையில் ஆலோசித்து அதிகாரப்பூர்வமாக முதல்வர் அறிவிக்கவுள்ளார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிக்கின்றன.

மத்திய அரசுக்கு தரும் வரியை மாநில அரசான தமிழ்நாடு தர முடியாது என்று சொல்வதற்கு ஒரு நொடி போதும் என்று சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது இந்திய அளவில் விவாதிக்கப்பட்ட அம்சமாக மாறிய நிலையில், என்ன முடிவை எடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அமைச்சரவை கூட்டம் முடிந்த பின்னர், அவரே செய்தியாளர்களை சந்தித்து மத்திய அரசு தொடர்பான நிலைப்பாட்டை விளக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

Related Post

இன்று மாலை 6 மணிக்கு மேல் பரப்புரை செய்தால் சிறை தண்டனை

Posted by - April 17, 2024 0
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர , வேட்பாளர்கள் வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் மக்களவைத் தேர்தலில், முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும்…

போதை ஏறிப்போச்சு…புத்தி மாறிப்போச்சு… மது மயக்கத்தில் சொந்த கார், பணம், மொபைலை பறிகொடுத்த வாலிபர்

Posted by - June 13, 2023 0
புதுடெல்லி: மது போதை அதிக மானதால் தனது சொந்த காரையே மறந்து மர்ம நபரிடம் பறிகொடுத்தார். போதை ஏறிப்போச்சு…புத்தி மாறிப்போச்சு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நடைபெற்ற…

இந்தியாவில் 3 பேருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி!

Posted by - January 6, 2025 0
சீனாவில் HMPV வைரஸ் பரவி அச்சத்தை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது இந்தியாவில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.சீனாவில் புதியதாக HMPV என்ற…

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைப்பது எப்படி? இது நல்ல ஐடியாவா இருக்கே..!

Posted by - December 13, 2024 0
புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என விரும்புபவர்கள் தற்போது மக்களுக்கு எதற்கான தேவை அதிகரித்திருக்கிறது என்பதை பொறுத்து தொழிலை அமைத்தால் எளிதாக அதில் வெற்றி பெற முடியும்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *