“பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள்”..ஆனால் இப்போ பாருங்க.!…இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!

20 0

அதிமுக கட்சி எங்களுக்கு எதிரி இல்லை என கூறியிருந்த நிலையில், இன்று அதிமுகவை காட்டமாக விமர்சித்துள்ளார், அண்ணாமலை

பாஜகவால் தோற்றோம் , பாஜக நோட்டா கட்சி என கூறியவர்கள் எல்லாம், தற்போது கூட்டணிக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காட்டமாக அதிமுகவை விமர்சித்திருக்கிறார்.

அதிமுக-பாஜக கூட்டணி 

தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என அதிமுகவின் பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் , சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு , எங்களுக்கு ஒரே எதிரி திமுக என இபிஎஸ் பதிலளித்தார்.

இதையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று பேசியதாவது, திமுக கட்சிதான் எங்களுக்கு ஒரே எதிரி.  திமுகவிற்கு எதிராக இருப்பவர்கள், எங்களுக்கு நண்பர்கள். அதிமுக தலைமையிலான ,எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியை ஏற்றுக் கொள்ளும் அனைவரையும் வரவேற்கிறோம் என தெரிவித்தார்.

அண்ணாமலை அதிமுக மீது தாக்குதல்:

மேலும், இரு தினங்களுக்கு முன்பு அண்ணமலை தெரிவிக்கையில், “ அதிமுக கட்சி எங்களுக்கு எதிரி இல்லை என தெரிவித்தார். இந்நிலையில், அதிமுக பாஜக செயல்பாடுகள், அதிமுக-பாஜக கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்பட்டது.

ஆனால், இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, திடீரென இபிஎஸ் தலைமையிலான அதிமுகவை காட்டமாக மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார்.

இன்று அண்ணாமலை பேசியதாவது , “ பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டார் கட்சி என்றும் மற்றும் பாஜகவால்தான் தோற்றோம் என்று கூறியவர்கள் , இன்று எங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி பலமாகி கொண்டே இருக்கிறது.

அதிமுகவை சிறுமைப்படுத்தும் அண்ணாமலை:

இக்கட்டான் சூழ்நிலையில் வந்தவர் தினகரன். பாஜக கூட்டணியில் உள்ள தினகரனுக்கு பாஜக நன்றியுடன் இருக்கும்.

மேலும், இபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளர் தலைமையில்தான் கூட்டணி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி .உதயக்குமார் தெரிவித்த நிலையில்,  பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிமுகவை சிறுமைப்படுத்தும் விதமாக , அண்ணாமலை  திடீரென பேச வேண்டிய சூழல் ஏற்பட்டதற்கான காரணம் என்ன, அதிமுக – பாஜக கூட்டணி முயற்சி எதிரான போக்கிற்கு சென்றுவிட்டதா என்றும் கேள்வியை எழுப்பியிருக்கிறது, அண்ணாமலையி பேச்சு.

அதிமுக எதிர்வினை:

இந்த தருணத்தில், அதிமுக கட்சியை மறைமுகமாக  , பாஜக கூட்டணிக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என பேசப்பட்டதாக கூறப்படும் நிலையில் , அதிமுக என்ன சொல்ல போகிறது என்று எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.

மேலும், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு அண்ணாமலைதான் தடையாக இருப்பதாக பாஜகவினரின் சிலர் கூறி வருவதாக கூறப்படும் நிலையில், அதிமுக சிறுமைப்படுத்திய பேசிய பேச்சானது, அதிமுக கட்சியினர் மட்டுமன்றி பாஜகவினர் சிலரிடையே கசப்பான போக்கையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Related Post

விஜய் கட்சியின் பெயர் இதுவா?

Posted by - January 30, 2024 0
விஜய் தற்போது தமிழ் சினிமா துறையில் டாப் ஹீரோவாக வலம் வரும் நிலையில், தனது ரசிகர்கள் மன்றம் மூலமாக அரசியல் கட்சி தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வந்தார்.…

“சென்னையில் இளம் திறனாளர்கள் அதிகம்” – சென்னை மாநாட்டில் பிரதமர் மோடி உரை

Posted by - March 5, 2024 0
வெள்ள மேலாண்மையை செய்யாமல் ஊடக மேலாண்மையை செய்கிறார்கள். சிறு குறு தொழில் துறையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது – பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக…

வருகிற நாடாளுமன்றத் தேர்தல் 4வது போர் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Posted by - May 31, 2023 0
சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு சமத்துவத்தை – சகோதரத்துவத்தை பேணிகாப்போம் என உரையாற்றினோம் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் நான்காவது போர் என விளையாட்டு…

கட்சிக்கு புதிய தலைவர் நியமனம்… 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக காங்கிரசில் ஆச்சரியம்!

Posted by - February 19, 2024 0
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு பலரது பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் செல்வப்பெருந்தகை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019 பிப்ரவரில்…

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம்… இதுதான் காரணமா?

Posted by - June 1, 2023 0
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி மற்றும் 20-க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் தற்காலிகமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *