மறந்துட்டீங்களா முதல்வரே..! “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?

99 0

தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான கொள்கை திட்டம் அறிவித்து ஓராண்டகியும், அதை செயல்படுத்துவது தொடர்பாக இதுவரை ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை.

தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான கொள்கை திட்டம் அறிவித்து ஓராண்டகியும், அதற்கான செயல்திட்டம் இன்னும் வெளியாகவில்லை.

ஓராண்டாகியும் நடவடிக்கை இல்லை:

இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் நலனுக்கான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதேநேரம், மகளிருக்காக தமிழ்நாடு அரசு வெளியிட்ட திட்டம் ஓராண்டியும் கிடப்பில் இருப்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? மாநிலத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள பெண்களின் நலனுக்காக, தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு பிபரவரி மாதம் ‘பெண்களுக்கான தமிழ்நாடு மாநிலக் கொள்கை’ (TNPW) அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், ஒரு வருடத்திற்கும் மேலாகியும், சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை, அந்த அறிவிப்புக்கான செயல் திட்டத்தை (PoA) இன்னும் வெளியிடவில்லை. கடந்த மாதம் சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கிடைத்த பதில்கள் அத்ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அதிர்ச்சி தந்த  ஆர்டிஐ பதில்கள்:

ஆர்டிஐ மூலம் கிடைத்த பதில்களில், 2024ம் ஆண்டு வெளியான மகளிர் கொள்கைக்கான செயல் திட்ட பணிகள் இன்னும் நடைபெற்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 2021 இல் வெளியிடப்பட்ட தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான செயல்திட்டங்களும் இன்னும் நடைபெற்று கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, பெண்களுக்கான கொளையில் குறிப்பிட்டுள்ளபடி, தலைமை செயலாளர் தலைமையில் துறைசார் செயலாளர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு கூட இதுவரை ஒரு முறைகூட நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இந்த வருடத்தில் அந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் ஆர்டிஐ பதில்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேநேரம், இந்த கூட்டமானது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டியது குறிப்பிடத்தக்கது. ஆட்சியர் தலைமையிலான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்க இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டும் என்பதும் விதியாகும். ஆனால், அத்தகைய கூட்டங்கள் இதுவரை நடைபெற்றதே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகளிர் கொள்கையின் நோக்கம் என்ன?

  • இடைநிற்றலைக் குறைக்க பாலின-உணர்திறன் கல்வி முறையை நிறுவுதல்
  • இளம்பெண்கள் மற்றும் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல்
  • முறையான/முறைசாரா துறைகளில் பாதுகாப்பான மற்றும் பெண்களுக்கு உகந்த சூழ்நிலையுடன் பணியிடத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது
  • பெண்கள் ஸ்டார்ட்-அப்களை ஆதரிக்கவும்
  • பாலின இடைவெளியைக் குறைக்க டிஜிட்டல் கல்வியறிவை ஊக்குவிப்பது
  • பெண்களின் திறமை இடைவெளிகளைக் குறைப்பது
  • பெண்கள் அரசியலில் பங்கேற்பதை ஊக்குவிப்பது ஆகியவற்றை, தமிழ்நாடு அரசின் மாநில மகளிர் கொள்கையின் நோக்கங்களாகும்.

இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் விரைவில் மாநில மகளிர் கொள்கைக்கான, செயல்திட்டங்களை அறிவித்து அவற்றை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. அதுவே மகளிர் தினத்தன்று தமிழக பெண்களுக்கு வழங்கும் சிறந்த பரிசாகவும் இருக்கும்.

Related Post

ரூ.1000 உரிமைத்தொகை.. தமிழ்நாடு அரசின் இணைய பக்கத்தை திறந்தால் ஷாக்.. என்ன இது? ஏன் இப்படி?

Posted by - September 25, 2023 0
சென்னை: மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்க தொடங்கப்பட்ட இணையதளம் கடந்த 3 நாட்களாக இயங்காமல் இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான…

Smallpox Prevention : பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?

Posted by - March 2, 2026 0
தமிழகத்தில் பரவும் சின்னம்மை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து, பனியின் தாக்கம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில்…

இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்

Posted by - December 2, 2025 0
சென்னையில் கடந்த 24 மணி நேரமாக வெளுத்து வாங்கிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (02.12.2025) நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும்…

அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?

Posted by - May 31, 2025 0
ஆதவ் அர்ஜுனா அதிமுகவை கிண்டலடித்த வீடியோ வைரலான நிலையில், அதற்கு பதிலடி எங்கிருந்து வந்துள்ளது தெரியுமா.? சீமானிடமிருந்து. ஆம், அவர் ஆதவ் அர்ஜுனா குறித்த முக்கிய தகவலை…

Tamil Nadu Budget 2024 Live : 12.00 மணி வரை தமிழக நிதிஅமைச்சர் அறிவித்த திட்டங்கள்….

Posted by - February 19, 2024 0
3000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்…! 3000 பேருந்துகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்து இந்த நிதியாண்டில் செயல்படுத்தப்படும் எனநிதியமைச்சர் தங்கம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *