மெர்சல் படம் நஷ்டமா..

17 0

மெர்சல்

தளபதி விஜய் – அட்லீ கூட்டணியில் உருவான திரைப்படம் மெர்சல். தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைந்தனர்.சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க, தேனாண்டாள் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது. மேலும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பல கோடி பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ. 250 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இப்படம் தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டம், அதனால் தான் அதன்பின் எந்த படத்தையும் தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவில்லை என தொடர்ந்து பல தகவல்கள் இணையத்தில் உலா வந்தன.

மெர்சல் படம் நஷ்டமா

 

இந்த நிலையில், மெர்சல் படம் நஷ்டம் என்கிற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி விளக்கம் கொடுத்துள்ளார்.

இதில் “நாங்கள் ஒரே நேரத்தில் ஒரு படம் மட்டும் நாங்கள் ஹீரோக்கள் இல்லை, நாங்கள் தயாரிப்பாளர்கள். ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்கள் பண்ணுவோம். அப்போது ஒரு படத்தினுடைய சுமை இன்னொரு படத்திற்கு போகும். நாங்க படம் கொடுத்த மட்டும் தான் நீங்கள் பாப்பீங்களா, யாரவது எங்களுடைய சகோதரர்கள் படம் கொடுத்துட்டு, தயாரிப்பாளர்கள் நல்ல entertainmnet கொடுத்துட்டு தான் இருக்காங்க. அதனால் தேவையில்லாத விஷயங்களை பற்றி பேசவேண்டாம். நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம்”.”மெர்சல் படம் எங்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்றது. நாங்க எவ்வளவு படம் எடுத்தாலும், மெர்சல் தயாரிப்பாளர்கள் என்று தான் அடையாளம் இருக்கிறது. விஜய் சாறுடன் வேலை பார்த்தது மிகவும் பெருமை” என கூறியுள்ளார்.

Related Post

லியோ படத்தில் இவரும் நடிக்கிறாரா.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் லோகேஷ் கனகராஜ்

Posted by - March 26, 2023 0
லியோ விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் அதைவிட மாபெரும் வெற்றியை கொடுக்க வேண்டும்…

‘பிச்சைக்காரன்-2’ தடை கோரி மேலும் ஒரு வழக்குப்பதிவு

Posted by - April 17, 2023 0
நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு  தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. சென்னை  உயர்நீதிமன்றத்தில்  ராஜகணபதி என்பவர்  தாக்கல்…

விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்பம் எப்படி இருக்கு!..இதோ ட்விட்டர் விமர்சனம்

Posted by - October 6, 2023 0
இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய…

அந்த காட்சியில் நடித்ததை நினைத்து இப்போதுவரை வேதனைப்படுகிறேன்!.. நடிகை சதா வெளிப்படை

Posted by - September 22, 2023 0
சதா தமிழில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சதா. இப்படத்தை தொடர்ந்து திருப்பதி,பிரியசகி, உன்னாலே உன்னாலே, அந்நியன் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.…

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் டீஸர் அப்டேட் பற்றிய செம தகவல்!

Posted by - July 24, 2023 0
தமிழ் சினிமாவில் தற்போது அதிகமாகவே இரண்டு பாகங்கள் கொண்ட படங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் போது தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உருவாக்கப்பட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *