சிங்கப்பெண்ணில் அன்புக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும் மகேஷ்.. நிற்கதியான ஆனந்தி, காப்பாற்ற போகும் அந்த நபர்

104 0

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மகேஷை கொலை செய்ய வேண்டும் என்ற அரவிந்தின் திட்டம் செல்லுபடி ஆகவில்லை.அன்பு மகேசை காப்பாற்றி விட்டான் என்றாலும் அதற்கு அடுத்து நடந்த விஷயம் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அன்புக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்கும் மகேஷ்

பாதி மயக்கத்தில் இருக்கும் மகேஷ் நடக்கும் அனைத்தையும் கவனித்திருப்பான், அன்புவை புரிந்து கொள்வான் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேஷ் கண் விழித்ததும் போலீஸ்காரர்களிடம் அன்பு தான் என்னை ஆளை வைத்து கொல்ல முயற்சி செய்தது என்று வாக்குமூலம் கொடுக்கிறான்.

இந்த விஷயம் ஆனந்திக்கு பெரிய அளவில் கோபத்தை ஏற்படுத்துகிறது. மகேஷிடம் போய் நியாயம் கேட்கப் போகிறேன் என்று போகும் ஆனந்தியை காவல்துறையினர் தடுத்து நிறுத்துகிறார்கள்.மகேஷ் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தின் படி அன்பு கைதாக கூட வாய்ப்பு இருக்கிறது. அன்பு கைதானால் ஆனந்தி மற்றும் அவனுடைய அம்மா லலிதாவின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்பது பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் மகேஷ் உண்மையை தெரிந்து கொண்டு அன்பு இல்லாமல் அரவிந்த் மற்றும் மித்ரா வேறு என்ன திட்டம் போடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள கூட இப்படி ஒரு வாக்குமூலத்தை கொடுத்து இருக்கலாம்.

அன்புவை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற மகேஷ் ஒருத்தனால் மட்டும் தான் முடியும். மகேஷ் உண்மையை தெரிந்து கொண்டு அன்பு வை காப்பாற்றுகிறானா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Post

சிவாங்கி ஃபைனல் போனது எப்படி? சொம்பு தூக்குறோமா.. CWC சர்ச்சைக்கு வெங்கடேஷ் பட் கொடுத்த பதில்

Posted by - June 7, 2023 0
விஜய் டிவி ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது ஒளிபரப்பாகி வரும் 4ம் சீசன் பல்வேறு அதிர்ச்சிகளை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. முக்கியமாக…

அடிக்கடி சாப்ட் டிரிங்ஸ் குடித்தால்?அதன் விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்

Posted by - January 29, 2024 0
நாம் அருந்திய 10 நிமிடத்தில் இந்த காஃபின் நமது ரத்த நாளங்களில் ஊடுருவும். இதனால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிக்கும். இன்றைய துரிதமான உலகில் உணவுப்…

இதை பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. நான் வாய் திறந்தால் சமந்தாவின் மானம் போய்விடும்.. தயாரிப்பாளர் காட்டம்

Posted by - April 27, 2023 0
குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியான ‘சாகுந்தலம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுத்து இருந்தனர். ஆனால் இதுவரை ரூ.10…

சப்பாத்தி, சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும்… உடுப்பி ஸ்டைல் வெள்ளை பூசணி குழம்பு

Posted by - November 4, 2023 0
இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு ஈஸியான, அதே சமயம் வித்தியாசமான சுவையில் ஒரு சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில்…

தொண்டை வலியால் அவதியா..? சட்டுனு கேட்கும் வீட்டு வைத்தியங்கள்..!

Posted by - December 17, 2025 0
திடீரென ஏற்படும் தொண்டை வலி பலருக்கும் பெரிய தொந்தரவாக மாறுகிறது. காலநிலை மாற்றம், குளிர்ந்த உணவுகள், வைரஸ் தொற்று, தூசி அல்லது அலர்ஜி காரணமாக இந்த பிரச்சனை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *