’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’ செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்! ஷாக்கான திமுகவினர்

28 0

செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்தாலும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு ஒன்றிணைந்து அனைவரும் திமுகவை எதிர்க்க முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

என்னதான் உட்கட்சி பிரச்சனை இருந்தாலும் என் விஸ்வாசம் அதிமுகவுக்கு தான்’’ என்பதை இன்று  சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு மூலம் நிரூபனம் செய்துள்ளார் செங்கோட்டையன்.  நாம் ஒன்றிணைந்து திமுகவுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற எடப்பாடியின் கோரிக்கையை ஏற்று அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

செங்கோட்டையன் vs ஈபிஎஸ்:

அதிமுகவின் மூத்த நிர்வாகியும் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளருமான செங்கோட்டையனுக்கும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்பட்டுள்ள மோதல் வெட்ட வெளிச்சமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரில் ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த செங்கோட்டையன், தொடர்ந்து பல சலசலப்புகளை ஏற்படுத்தி வந்தார்.

கட்சிக்குள்ளேயே தனது ஆதரவாளர்களை திரட்டி ஈபிஎஸ்க்கு எதிராக அணி சேர்ப்பதாகவும் அவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இப்படி இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில், சமீபத்தில் ரங்கராஜ் பாண்டேவின் யூடியூப் சேனலின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற செங்கோட்டையன் மேடையிலேயெ பெயர் குறிப்பிடாமல் பேசி ஈபிஎஸ் மீதான அதிருப்திகளை கடுமையாக வெளிப்படுத்தினார்.

இவ்வளவு நாள் இலைமறைக்காயாக இருந்த பிரச்சனை இந்த மேடையில் வெட்டவெளிச்சமானது. இதனையடுத்து வைகைச்செல்வன் உள்ளிட்ட ஈபிஎஸ் ஆதரவாளர்கள் செங்கோட்டையனுக்கு எதிராகவும் ஓபிஎஸ் சசிகலா என ஈபிஎஸ் எதிர்ப்பாளர்கள் செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும் பேசி அதிமுகவே இரண்டாக போகும் அளவிற்கு இந்த பிரச்சனையை தூண்டிவிட்டனர். இப்படியான நிலையில் தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

நம்பிக்கையில்லா தீர்மானம்

அதில் செங்கோட்டையன் அவைத்தலைவர் தனிமையில் சந்தித்தது பேசுபொருளானது. அதற்கு விளக்கமளித்து செங்கோட்டையன் தெளிவுப்படுத்தினார். இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அதன் வாக்கெடுப்பின் போது செங்கோட்டையன் அதிமுகவுக்கு ஆதரவளிப்பாரா இல்லை எடப்பாடி மீதுள்ள கோபத்தை இதில் காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.இந்நிலையில்  சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான குரல் வாக்கெடுப்பை நேற்று நடத்தியது.

அதிமுகவுக்கு என் விசுவாசம்:

அதில்,அதிமுகவுக்கு ஆதரவாக செங்கோட்டையன் வாக்களித்தார்.  நாம் ஒன்றிணைந்து திமுகவுக்கு எதிராக செயல்பட வேண்டும் நமது பிரச்சனைகளை அப்பறம் பார்த்துக்கொள்ளலாம் என எடப்பாடி எம் எல் ஏக்கள் சிலரை தூது அனுப்பி செங்கோட்டையனை சமாதானப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தனது கட்சிக்கு விஸ்வாசமாக செயல்பட்டுள்ளார் செங்கோட்டையன். எனினும் இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனையடுத்து டிவிசன் முறையில் வாக்கெடுப்பு நடத்தக்கோரி எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையும் ஏற்கப்பட்ட நிலையில், அதிலும் அதிமுக தோல்வியையே சந்தித்தது.

ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம் ஓபிஎஸ் இந்த தீர்மான வாக்கெடுப்பில் அதிமுகவுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஆதரவாக வாக்களித்துள்ளார். ஏற்கனவே அதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டதாக தெரிகிறது. அதிருப்தியில் இருந்தாலும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு ஒன்றிணைந்து அனைவரும் திமுகவை எதிர்க்க முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

Related Post

உதயநிதி பதவியேற்பு விழா: எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

Posted by - December 13, 2022 0
உதயநிதி அமைச்சரானால் திமுக ஆட்சியில் நடைபெறும் ஒட்டுமொத்த ஊழலுக்கும் தலைவராவார் – ஈபிஎஸ் உதயநிதி அமைச்சராகவுள்ள நிலையில் நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…

விஜய் வீட்டில் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: ஜான் ஆரோக்யசாமிக்கு ஸ்கெட்சா: வேலையை ஆரம்பித்த ஆதவ்.!

Posted by - February 11, 2025 0
சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் , தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிசோரை சந்திக்க வைத்திருக்கிறார், ஆதவ் அர்ஜூனா. தமிழக வெற்றிக் கழகத்திற்கு, தேர்தல்…

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம்… இதுதான் காரணமா?

Posted by - June 1, 2023 0
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி மற்றும் 20-க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் தற்காலிகமாக…

அம்பேத்கர் நூல் வெளியீட்டில் சமூக நீதி, அரசியல், மற்றும் மக்கள் சேவை குறித்து விஜய் – திருமாவளவன் கருத்துக்கள்!”

Posted by - December 7, 2024 0
#vijay #tvk #bjp #vck #dmk #aiadmk #congress #thirumavalavan #thalapathyvijay  அம்பேத்கர் நூல் வெளியீட்டில் சமூக நீதி, அரசியல், மற்றும் மக்கள் சேவை குறித்து விஜய்…

”அறம் எங்கே வெல்லும்…” – வைரலாகும் கமல்ஹாசனின் லேட்டஸ்ட் ட்வீட்

Posted by - January 24, 2023 0
அதற்கேற்ப காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். சினிமா, அரசியல், பிக்பாஸ் என நடிகர் கமல்ஹாசன் பரபரப்பாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *