18 வருட காத்திருப்பு ஓவர் -? ஃபைனலில் பெங்களூரு – பஞ்சாப்

196 0

18 வருட காத்திருப்பை முடித்து முதல் கோப்பையை வெல்லப்போவாது யார் என்பது? பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை பந்தாடிய பஞ்சாப்:

நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெங்களூருவை, எதிர்கொள்ளப்போவது யார் என்பதை உறுதி செய்யும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 203 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ருத்ரதாண்டவமாட, 19 ஓவர்கள் முடிவிலேயே இலக்கை எட்டி இரண்டாவது முறையாக அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதன்படி, நாளை நடைபெற உள்ள நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.

ஐபிஎல் 2025 ஃபைனல் – பெங்களூரு Vs பஞ்சாப்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். பெங்களூரு அணி ஏற்கனவே மூன்று முறையும்  பஞ்சாப் அணி ஏற்கனவே ஒரே ஒரு முறையும் மட்டுமே இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளன. ஆனால், அந்த வாய்ப்புகளில் இந்த அணிகள் கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியின் மூலம் இதுவரை கோப்பையையே வெல்லாத ஒரு அணி புதிய அணி சாம்பியனாக உள்ளது.

18 வருட காத்திருப்பு ஓவர்:

கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடங்கியபோது மொத்தம் 8 அணிகள் இருந்தன. அதில் மும்பை மற்றும் சென்னை அணிகள் தலா 5 முறையும், கொல்கத்தா மூன்று முறையும் கோப்பையை வென்றுள்ளன. டெக்கான் சார்ஜர்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா ஒருமுறை கோப்பையை வென்றுள்ளன. அண்மையில் ஐபிஎல் போட்டியில் இணைந்த குஜராத் அணி கூட ஒருமுறை கோப்பையை வென்று வெட்டது. ஆனால், ஆரம்பம் முதலே ஐபிஎல் போட்டிகளில் உள்ள பெங்களூரு, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இந்நிலையில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இறுதிப்போட்டிக்குள் முன்னேறியுள்ளதால், 18 வருட காத்திருப்பு முடிந்து ஏதோ ஒரு அணி முதன்முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க உள்ளது.

பெங்களூரு Vs பஞ்சாப் -நேருக்கு நேர்

ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் 36 முறை நேருக்கு நேர் மோதி, தலா 18 முறை வெற்றி பெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணிகளே கோப்பையை வென்றுள்ளன. அந்த வகையில் பெங்களூரு அணி முதல் கோப்பையை கைப்பற்றுமா? அல்லது கடந்த ஆண்டு கொல்கத்தாவிற்கு கோப்பையை வென்றது போல இந்த முறை பஞ்சாபை ஸ்ரேயாஸ் சாம்பியனாக்குவாரா? என்பாது ரசிகர்கள் பெருத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Post

IND vs ENG 4th Test: இந்தியா முதலில் பேட்டிங்.. கழட்டிவிடப்பட்ட கருண் நாயர்! அணிக்குள் வந்த சிஎஸ்கே புயல்!

Posted by - July 23, 2025 0
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணிக்காக அன்சுல் கம்போஜ் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.…

பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுப்பு – நடந்தது என்ன?

Posted by - September 15, 2025 0
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியை இந்திய அணிப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களை மறுத்து, பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், டாஸின்போது…

ஃபைனலி.. மாஸ் காட்டிய இந்திய அணி – அரையிறுதியில் ஆஸி.,? தெ.ஆப்.,? இங்கி.,? யாருடன் மோதல்?

Posted by - October 24, 2025 0
உலகக் கோப்பை லீக் சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலின் தற்போதைய நிலவரப்படி, அரையிறுதியில் இந்தியா…

IPL 2023 : வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்…

Posted by - April 18, 2023 0
டூப்ளசிசுடன், மேக்ஸ்வெல் இணைந்து அதிரடிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *