இலையிலேயே குட்டி தூக்கம் போட்ட திமுக தொண்டர்கள் – முதல்வர் சாப்பிடுவதற்காக 2 மணி நேரம் உணவு பரிமாறப்படாததால் விரக்தி!

200 0

மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் சாப்பிடுவதற்காக 2 மணி நேரம் உணவு பரிமாறப்படாததால் திமுக தொண்டர்கள் இலையிலேயே படுத்து உறங்கிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

மதுரை உத்தங்குடியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்காக தடபுடலாக 24 வகையான அசைவ விருந்து மற்றும் சைவ விருந்து தயார் செய்யப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற திமுக தொண்டர்கள் உணவு அருந்துவதற்காக பந்தியில் அமர்ந்தனர். அப்போது முதலமைச்சர் சாப்பிட்ட பின் தான் தொண்டர்களுக்கு உணவு வழங்க வேண்டுமென விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பந்தி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் திமுக தொண்டர்கள் வேதனை அடைந்தனர். பின்னர் அசைவ உணவுக்காக வைக்கப்பட்ட இலையிலேயே சிலர் தலை வைத்து படுத்து உறங்கினர்.

மேலும் சிலரோ ஏன் தான் வந்தோம் என நினைத்து தலையில் கை வைத்தும், சக தொண்டர்களுடன் புலம்பியபடியும் அமர்ந்திருந்தனர். சிலர் சாப்பிட வந்த இடத்தில் நாளிதழை படித்து கொண்டிருந்தனர்.

பின்னர் ஒரு வழியாக முதலமைச்சர் சாப்பிட்ட பின் உணவு பறிமாறப்பட்ட நிலையில் திமுக தொண்டர்கள் அசைவ விருந்தை ருசித்து சென்றனர்.

இதனிடையே திமுக பொதுக்குழு கூட்டத்தில் உணவு பரிமாற கேரளாவில் இருந்து பணியாட்கள் அழைத்து வரப்பட்ட நிலையில், திமுக தொண்டர்கள் கேட்ட உணவுப் பொருட்களின் பெயர் தெரியாததால் அவர்கள் பரிமாற முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது.

கேரளாவில் இருந்து உணவு பரிமாற வந்த 600-க்கும் மேற்பட்டோர் மலையாள மொழியில் பேசியதால் அவர்களிடம் விரும்பிய உணவு களை கேட்க முடியாமல் திமுக தொண்டர்கள் தவித்தனர். இதனால் கேட்ட உணவு கிடைக்காமல் கிடைத்த உணவை உண்டுவிட்டு திமுக தொண்டர்கள் விரக்தியில் புறப்பட்டு சென்றனர்.

Related Post

3 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: அதிகாரிகள், ஊழியர்கள் பணியில் இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Posted by - December 29, 2023 0
சென்னை: தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்னும் முழுமையாக…

“கேவலமா இருக்கு” டங்ஸ்டன் விவகாரம்.. இபிஎஸ்!

Posted by - December 10, 2024 0
டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக துரோகம் இழைத்து விட்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி அளித்துள்ளார். மதுரையில் டங்ஸ்டன்…

நடிப்பது மட்டுமே நாடாள தகுதி என்பது அவமானம் – சீமான் விமர்சனம்

Posted by - June 18, 2023 0
திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கு, ஒரு இனத்தை வழி நடத்துவதற்கு தலைவனாக இருப்பதற்கு தகுதி வந்து விடுவது என்று கூறுவது அவமானகரமானது என சீமான்…

உக்கிரமா இருக்கும்.. தென் மாவட்டங்களில் மீண்டும் அதிகனமழைக்கு வாய்ப்பு! 3 நாட்கள் அலர்டா இருங்க

Posted by - December 26, 2023 0
சென்னை: தென் மாவட்டங்களில் மீது அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் எச்சரித்து உள்ளார். ராஸ்பி அலைவு கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிக்கு…

சதுரங்கவேட்டை சினிமா பாணியில் இரிடியம் கண்டுபிடிக்கும் ‘ரைஸ் புல்லிங் எந்திரம்’ என கூறி மோசடி-2 பேர் கைது

Posted by - August 2, 2023 0
வந்தவாசி: விழுப்புரம் மாவட்டம் நாப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர்கணேஷ். வியாபாரியான இவர் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடனாளி ஆனார். இதையடுத்து நண்பர் மூலமாக ரைஸ் புல்லிங் எந்திரம் வாங்கி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *