“சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்“ – நயினாரை அதிர்ச்சியில் உறையவைத்த பாஜக தொண்டர்

155 0

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், மக்கள் சோறு போட தயாராக இருப்பதாகவும், ஆனால் ஓட்டு போட மாட்டோம் என்று கூறுவதாகவும் தொண்டர் ஒருவர் தெரிவித்ததால், அவர் அதிர்ச்சி அடைந்தார்.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும், தேர்தல் வேலைகளை தொடங்கி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், பாஜக பூத் கமிட்டி ஆய்வுக்கு வந்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், அக்கட்சியின் தொண்டர் ஒருவர், சோறு கூட போடுறோ, ஆனா ஓட்டு போட மாட்டோம் என்று மக்கள் கூறுவதாக தெரிவித்து, அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

பாஜக பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரம்

தமிழ்நாட்டில், அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், தேர்தலுக்கான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் பாஜக பூத் கமிட்டி அமைத்து வருகிறது.

இந்நிலையில், விருதுநகரில் பூத் கமிட்டி ஆய்வுக்கு திடீரென சென்றார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். அங்குள்ள ரோசல்பட்டி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே, அவர் பூத் கமிட்டி ஆய்வுக்கு சென்றார்.

“சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டுப் போட மாட்டோம்“

அப்போது, அங்கு வந்திருந்த பாஜக தொண்டர் ஒருவர், “நீங்கள் தேர்தலில் நில்லுங்கள், உங்களுக்கு சாப்பாடு கூட போடுறோம், ஆனா ஓட்டுப் போட மாட்டோம் என எல்லாரும் சொல்றாங்க“ என்று நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தார் நயினார் நாகேந்திரன். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட பாஜக நிர்வாகிகள், அந்த தொண்டரிடம், அதைப் பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம் எனக் கூறி அவரை அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தால் நயினார் அதிர்ச்சியடைந்தாலும், அங்கிருந்த மற்றவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அந்த தொண்டரின் கருத்து மக்களின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிப்பதாக சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.

பொதுவாக இது போன்ற விஷயங்களில் அண்ணாமலை உஷாராக இருப்பார். அவரது அதிரடி நடவடிக்கைகள், பேச்சுக்களால், பாஜக தொண்டர்கள் அவர் அருகில் போவதற்கே யோசிப்பார்கள். ஆனால், நயினார் நாகேந்திரன் அடிப்படையிலேயே மென்மையான போக்கைக் கொண்டவர். இதனால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துவிட்டது. இதற்குப் பிறகாவது, அவர் கொஞ்சம் ஸ்ட்ரிக் ஆஃபீசராக மாறுவாரா என்று பார்க்க வேண்டும்.

தேர்தல் நெருங்கி வருவதால், இதுபோன்ற கட்டெண்ட்டுகளை கொடுக்காமல் இருப்பது கட்சிக்கு நல்லது. என்ன செய்வார் நயினார்.?

 

Related Post

தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா

Posted by - May 30, 2025 0
 ராமதாஸ் நிறுவிய பாமக கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அன்புமணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாமக கட்சியை அன்புமணி முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர பாஜக உதவகூடும்…

கப்சிப் விஜய்.. அரசியல் பக்குவம் இல்லையா? காட்டிகொடுத்த மாநாடு

Posted by - August 22, 2025 0
Vijay: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் விஜய், மதுரையில் நடத்திய பெரிய அரசியல் மாநாடு தற்போது வைரலாக பேசப்படுகிறது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள்…

பொங்கலுக்கு கொட்டப்போகுது பரிசு மழை.! ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5ஆயிரமா.?

Posted by - November 13, 2025 0
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பாக தமிழக அரசு 5ஆயிரம் ரூபாய் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இது சாத்தியமா.?…

ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?

Posted by - January 17, 2026 0
சட்டமன்ற தேர்தலுக்கான சில முக்கியமான வாக்குறுதிகளை இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட நிலையில், அதனை கடுமையாக விமர்சித்துள்ளார் சீமான். அப்படி என்ன சொன்னார்.?…

அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்திய பாஜக அரசுதான்: பழனிசாமி தகவல்

Posted by - September 16, 2025 0
சென்னை: அதி​முக ஆட்​சியை காப்​பாற்​றியது மத்​திய பாஜக அரசு​தான். அதற்கு நன்​றி​யுடன் இருக்​கிறோம் என்று அண்ணா பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். அதி​முக சார்​பில் அண்​ணா​வின் 117-வது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *