இந்த தகவலை மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
உதயநிதி ஸ்டாலின்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர். அதுமட்டுமின்றி விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் என பல விஷயங்களை உதயநிதி ஸ்டாலின் செய்து வருகிறார்.
இவர் சமீபத்தில் பிளாக் ஷீப் என்ற Youtube சேனலை வாங்கியுள்ளார். அந்த Youtube சேனல் தற்போது தொலைக்காட்சியான மாறியுள்ள நிலையில், அந்த தொலைக்காட்சிக்காகவும், பிளாக் ஷீப் ஓடிடி-காகவும் புதிய படங்களை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் உதயநிதி.
2000 கோடி முதலீடு
இதற்காக ரூ. 2000 கோடி முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சில பழைய திரைப்படங்களை இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், விரைவில் புத்தம்புதிய திரைப்படங்கள் வாங்கி அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.

.