தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று நடைபெற்றது கட்சியின் தலைவர் விஜய் அவர்களின் அதிரடி உரையுடன் மாநாடு முடிவடைந்தது.
இந்நிலையில் நேற்று முதலே தொண்டர்களின் கட்டுகடங்காத கூட்டத்தால் மாநாட்டு திடல் திருவிழா கோலத்தில் காட்சியளித்தது.தவெக சார்பாக சிறப்பாக முன்னேற்பாட்டு பணிகள் மாநாட்டிற்க்காக செய்யபட்டு இருந்தது.
இந்த நிலையில் தமிழக ஊடகங்கள் சில தவெக மாநாட்டு திடலில் இருந்து குறைகளை மட்டுமே திரும்ப திரும்ப ஒளிபரப்பி கொண்டிருந்தன,மேலும் தொண்டர்களை தேடி தேடி குறைகளை கேட்க முற்பட்டன ஆனால் உணவிற்க்கு தட்டுபாடு என கூறிய செய்தி சேனல் நிருபருக்கே உணவு இருக்கிறது நாங்கள் உங்களுக்கு வேண்டுமென்றால் ஊட்டிவே விடுகிறோம் சாப்பிடுங்கள் என்று செய்தியாளருக்கு ஊட்டிவிட்டு தவெக-வினர் சம்பவம் செய்தனர்.
”ஒரு புதுக்கட்சி நடத்தற மாநாட்டுல என்ன என்ன குறை இருக்குனு தேடி தேடி காட்ற நீங்க….என்னைக்காச்சும் அரசு பள்ளில, கல்லூரில, மருத்துவமனைல, தொகுதில மக்களுக்கு என்ன என்ன குறை இருக்குன்னு தேடி தேடி காட்டிருக்கீங்களா” என தொலைகாட்சியில் மாநாட்டை பார்த்தவர்களும்,அரசியல் விமர்சகர்களும் செய்தி ஊடகங்களை கடிந்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.