விஜய் விரைவில் கரூர் வருகிறார்; டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கேட்டுள்ளோம் – தவெக நிர்வாகி பேட்டி

199 0

கரூர்: “கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் விஜய் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் விஜய் நேரில் வந்து சந்திக்க உள்ளார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்துக்கு இமெயில் மூலமாக அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் சென்று அனுமதி கேட்க இருக்கிறோம்.” என்று தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் கரூரில் பேட்டியளித்துள்ளார்.

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நபர்களின் உறவினர்களிடம் தவெக தலைவர் விஜய் கடந்த 2 நாட்களாக வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்து வருகிறார். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களிடம் பேசி முடித்துள்ளார்.இந்த வீடியோ கால் பேசும் போது, பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியுமான அருண்ராஜ், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்துள்ளனர்.இது தொடர்பாக கரூரில் அருண்ராஜ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் எங்கள் கட்சித் தலைவர் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் பேசும் போது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீங்கள் தைரியமாக இருங்கள். தொடர்ந்து போராடுங்கள். என்று அவருக்கு ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்டவர்களைவிரைவில் விஜய் நேரில் வந்து சந்திக்க உள்ளார்.இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்துக்கு இமெயில் மூலமாக அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் சென்று அனுமதி கேட்க இருக்கிறோம். அரசு நடவடிக்கைகளுக்கு இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.

Related Post

கரூர் துயர சம்பவம்! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. 41 குடும்பங்களை தத்தெடுக்கும் விஜய்..

Posted by - October 13, 2025 0
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோகால் மூலம் விஜய் பேசினார்.…

பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.!

Posted by - December 26, 2025 0
கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்ட காரணத்தால் பாமகவில் இருந்து மூத்த தலைவர் ஜி.கே.மணி நீக்கப்படுவதாக அன்புணி அறிவித்துள்ளார். பாமகவில் உட்கட்சி மோதல் பாமகவில் உட்கட்சி மோதல் உச்சத்தை…

TAC TV விவகாரம்: “அன்று ஹாத்வே இன்று அரசு கேபிள்” – திமுக அரசு மீது BJP தலைவர் அண்ணாமலை சாடல்

Posted by - November 23, 2022 0
திரு,அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்த இரண்டு நாள்கள் நமது மக்களுக்கு மீண்டும் 2006-2011 காலகட்ட கொடுங்கோல் குடும்ப ஆட்சியை நிச்சயமாக நினைவுபடுத்தியிருக்கும் தமிழ்நாடு முழுவதும் சுமார்…

தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு: முதல்வருக்கு உதயநிதி வேண்டுகோள்

Posted by - December 15, 2025 0
திரு​வண்​ணா​மலை: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட இளைஞர்​களுக்கு அதிக வாய்ப்​பு​கள் வழங்க வேண்​டும் என்று முதல்​வரிடம் கோரிக்கை வைப்​பேன் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கூறி​னார். திரு​வண்​ணா​மலை​யில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *