“உலகக்கோப்பையை வென்றதற்கு ‘அந்த‘ முக்கிய முடிவு தான் காரணம்“: ஸ்மிருதி மந்தனா கூறியது என்ன.?

188 0

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தியுள்ளது. இந்த வெற்றி குறித்து பேசிய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஒரு முக்கிய முடிவாலேயே இந்த சாதனையை படைத்ததாக கூறியுள்ளார்.

நவி மும்பையில் நேற்று நடைபெற்ற இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன் முறையாக உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி வென்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், இந்த வெற்றி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தங்களின் ஒரு முக்கிய முடிவாலேயே இந்த வெற்றி சாத்தியமானதாக தெரிவித்துள்ளார். அந்த முடிவு என்ன.? பார்க்கலாம்.

ஸ்மிருதி மந்தனா கூறியது என்ன.?

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்திய அணி வென்று அசத்திய நிலையில், இந்திய மகளிர் அணியின் முக்கிய வீராங்கனையும், நட்சத்திர ஆட்டக்காரருமான ஸ்மிருதி மந்தனா, இந்த வெற்றி குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

இந்த வெற்றிக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ள அவர், இந்த வெற்றியை தன்னுள் இன்னும் முழுமையாக உள்வாங்க முடியவில்லை என கூறியுள்ளார். பொதுவாக தான் கிரிக்கெட் மைதானத்தில் உணர்ச்சிவசப் பட்டதில்லை என்றம், ஆனால் இந்த வெற்றி நிஜமாகவே ஒரு மிகவும் நம்ப முடியாத ஒரு தருணமாக தனக்கு இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ஒவ்வொரு உலகக் கோப்பைக்கும் தாங்கள் விளையாட சென்றபோதும், தங்கள் அனைவருக்குமே எத்தனையோ மன வருத்தங்கள் ஏற்பட்டதாகவும், பல சமயங்களில் இதயம் நொறுங்கியுள்ளதாகவும் ஸ்மிருதி மந்தனா கூறியுள்ளார்.

மேலும், கடந்த கால ஏமாற்றங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு பெரிய பொறுப்புணர்ச்சியாக மாறியதாகவும், அந்த அனுபவங்களை உறுதியாக மாற்றிக்கொண்டு, தங்கள் அனைவரின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த கடுமையாக உழைத்ததாகவும், இந்த ஒரு இரவிற்காக 45 நாட்கள் தாங்கள் தூங்காமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“முக்கியமான ஒரு முடிவை எடுத்தோம்“

அதோடு, கடந்த உலகக் கோப்பை தங்களுக்கு மிகவும் கடினமாக இருந்ததாக கூறிய ஸ்மிருதி மந்தனா, அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறினார். அந்த தோல்விக்குப் பிறகுதான் தாங்கள் அனைவரும் ஒரு குறிக்கோளோடு இருந்ததாகவும், ஒரு முக்கிய முடிவை அந்த தருணத்தில் எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, அனைவருமே உடல் தகுதியை அதிகரித்து, பலமான வீராங்கனைகளாக மாறுவது என்றும், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த வீராங்கனைகளாக இருப்பது என்ற முடிவுவை எடுத்து உழைத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், அணியின் வெற்றி என்பதைத் தாண்டி, மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கான பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக நம்புவதாகவும், கடந்த ஒன்றரை மாதங்களாக தாங்கள் பெற்ற ஆதரவை காணும்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஸ்மிருதி மந்தனா கூறியுள்ளார்.

52 ரன்கள் வித்தியாசத்தில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி

நவி மும்பையில் நேற்று நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்யில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது தென்னாப்பிரிக்க அணி. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்களை குவித்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 87 ரன்களும், தீப்தி ஷர்மா 58 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்களும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, 299 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் ஒருபுறம் நிலைத்து ஆடி 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் .ஆனால், மறுமுனையில் மற்ற வீராங்கனைகள் தொடர்ந்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறியதால், 45.3 ஓவர்களில், 246 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது.

இதையடுத்து இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

Related Post

தோல்வியில் இருந்து மீண்டு வருமா மஞ்சள் அணி? – கொல்கத்தா அணியுடன் இன்று பலப்பரீட்சை

Posted by - April 8, 2024 0
நாடாளுமன்ற தேர்தல் எதிர்பார்ப்புகளை எல்லாம் மிஞ்சும் வகையில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கிறது. சொந்த மண்ணில் அடுத்தடுத்து வெற்றி, அண்ணிய மண்ணில் அடுத்தடுத்து…

கோட்டையை இழந்த CSK, கோப்பை வரைக்கும் எப்புடி.. தோனியின் மீதே அதிருப்தி வர வைத்த சம்பவம்!

Posted by - April 6, 2025 0
Chennai Super Kings: படம் பிளாப் ஆனா என்ன தல ஸ்கிரீனில் வந்தா மட்டும் போதும். போட்டியில் தோத்தா என்ன தல ஆடிட்டோரியத்துக்கு வந்தா மட்டும் போதும். சென்னை…

இது வெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லை..இது ஒரு விக்ரமன் சார் படம் தான்!

Posted by - May 30, 2023 0
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெற்றிகரமாக வலம் வருவதற்கு காரணம் என்ன என்று பல வீரர்களிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் ஒரே பதில் சிஎஸ்கே ஒரு அணி…

கடைசி பந்து வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்…

Posted by - May 1, 2023 0
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்திருந்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப்…

IPL Auction 2025: அஷ்வின், நூர் அகமதை வாங்கியது ஏன்? – சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்

Posted by - November 25, 2024 0
நூர் அகமது, ரவிசந்திரன் அஷ்வின், டெவான் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர் உள்ளிட்ட 7 வீரர்களை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *