சிறுத்தைகளுக்காக சீறிய பொன்முடி! – மீண்டும் புகைய ஆரம்பிக்கும் விழுப்புரம் திமுக விவகாரம்

146 0

தேர்​தல் சமயத்​தில் தேவையற்ற மனக்​கசப்​பு​கள் வேண்​டாம் என்​ப​தற்​காகவே முன்​னாள் அமைச்​சர் பொன்​முடியை மீண்​டும் துணைப் பொதுச்​செய​லா​ள​ராக்​கி​னார் ஸ்டா​லின். ஆனால், பொன்​முடிக்​கும் விழுப்​புரம் மத்​திய மாவட்ட திமுக செய​லா​ள​ரான லட்​சுமணன் எம்​எல்​ஏ-வுக்​கும் இடை​யில் மீண்​டும் உரசல் ஆரம்​பித்​து​விட்​டது.

எஸ்​ஐஆரைக் கண்​டித்து இண்​டியா கூட்​டணி சார்​பில் விழுப்​புரத்​தி​லும் 11-ம் தேதி கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. இது லட்​சுமணனின் மத்​திய மாவட்ட எல்​லைக்​குள் வந்​த​தால் இதற்​கான ஏற்​பாடு​களை அவரே முன்​னின்று கவனித்​தார்.இந்த நிலை​யில், ஆர்ப்​பாட்​டத்​துக்​காக அச்​சிடப்​பட்ட நோட்​டீஸில், கூட்​ட​ணிக் கட்​சி​யான விசிக-​வின் பொதுச்​செய​லா​ளர் ரவிக்​கு​மார் எம்​.பி-​யின் பெயரை​யும் திமுக மாநில விவ​சாய தொழி​லா​ளர் அணி​யின் செய​லா​ளர் அன்​னியூர் சிவா எம்​எல்​ஏ-​வின் பெயரை​யும் சிறிய​தாக போட்டு அவர்​களை இருட்​டடிப்பு செய்​து​விட்​ட​தாக சிலர் சர்ச்​சையைக் கிளப்​பி​னார்​கள்.இதைக் கண்​டித்து சமூக வலை​தளத்​தில் விசிக-​வினர் தங்​களது எதிர்ப்​பு​களை பதிவு செய்​தனர். உடனடி​யாக இதில் தலை​யிட்ட பொன்​முடி உடனடி​யாக, லட்​சுமணனை தொடர்பு கொண்​டு, “கூட்​ட​ணி​யில் முக்​கிய கட்​சி​யாக உள்ள விசிக-​வின் பொதுச்​செய​லா​ள​ரான ரவிக்​கு​மாரை ஏன் முன்​னிலை​யில் போட​வில்​லை…

அன்​னியூர் சிவா​வின் பெயரை ஏன் வரவேற்​புரை​யில் போட​வில்​லை? உங்​களோடு இருக்​கி​றார் என்​ப​தற்​காக, முன்​னாள் எம்​எல்​ஏ-​வான புஷ்ப​ராஜுக்கு மட்​டும் முக்​கி​யத்​து​வம் கொடுக்​கிறீர்​களா? அப்​படி​யா​னால் விசிக வாக்கு நமக்கு தேவை​யில்​லை​யா? தலை​மை​யில் இருந்து கேள்வி கேட்​டால் இதற்​கெல்​லாம் யார் பதில் சொல்​வது? நோட்​டீஸை இறுதி செய்​வதற்கு முன்​பாக மண்டல பொறுப்​பாள​ரான அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வத்​துக்கு அனுப்பி ஒப்​புதல் பெற்​றீர்​களா?” என கேள்வி மேல் கேள்வி​களைக் கேட்டு துளைத்து எடுத்​து​விட்​டா​ராம்.

இதையடுத்து அந்த நோட்​டீஸை அப்​படியே வைத்​து​விட்டு ரவிக்​கு​மார் மற்​றும் அன்​னியூர் சிவா​வின் பெயர்​களை பெரி​தாகப் போட்டு புதி​தாக இன்​னொரு நோட்​டீஸை அடித்து அதை விநி​யோகம் செய்​திருக்​கிறது லட்​சுமணன் தரப்​பு. எடுத்த பதவியை திரும்​பக் கொடுத்​து​விட்​டால் விழுப்​புரத்​தில் விவ​காரம் இருக்​காது என்று நினைத்தே பொன்​முடியை மீண்​டும் துணைப் பொதுச் செய​லா​ள​ராக்​கியது தி​முக. ஆனால்​, நடப்​பது என்​ன​வோ அதற்​கு நேர்​ மாறாகத்​தான்​ இருக்​கிறது.

Related Post

தவெக கூட்டணிக்கு தயாராகிறதா காங்கிரஸ்?

Posted by - February 27, 2026 0
காங்கிரஸும் எங்களுடன் கைகோத்தால் வெற்றி உறுதி. உங்களுக்குத் துணை முதல்வர் பதவி மற்றும் 70 தொகுதிகள் தரத் தயாராக இருக்கிறோம்’ என தவெக தரப்பு சொல்லியிருக்கிறது. தவெக-வுடன்…

’34 நாட்கள், 10 ஆயிரம் கி.மீ, 100 தொகுதிகள்’ மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..!

Posted by - August 19, 2025 0
‘காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள என்று பல்வேறு விமர்சனங்கள் எடப்பாடி பழனிசாமி பயணம் குறித்து எழுந்தாலும் அவரின் இந்த சுற்றுப்பயணம் அதிமுகவிற்கு புதிய தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது’‘மக்களை காப்போம்,…

தீபாவளிக்கு மழை உறுதி! 20 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

Posted by - October 18, 2025 0
வங்கக்கடலில் அக்டோபர் 24-ஆம் தேதி உருவாகும் என முன்பதாக கூறப்பட்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது அக்டோபர் 21-ஆம் தேதியே உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. தீபாவளி திங்களன்று…

திமுகவுக்கு கவுன்ட் டவுன்..

Posted by - January 23, 2026 0
 தமிழ்நாட்டை ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். இப்போது திமுகவின் முடிவுரைக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது என்று பிரதமர் மோடி பேசினார். தமிழ் நாட்டை திமுக அரசிடம் இருந்து விடுவித்து…

நான் முதலமைச்சரானால்! #விஜய்

Posted by - February 23, 2026 0
2026 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *