மாவீரர்களுக்கு தமிழரசுக் கட்சி இழைக்கும் பெரும் அநீதி! முன்னாள் எம்.பி ஆவேசம்

168 0

தமிழரசு கட்சி தமிழர்களுடைய 70 வருட சமஸ்டி கோரிக்கை, வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமையை என்பவற்றை கைவிட்டு பௌத்தம் அரச மதம் என்பதை ஏற்றுக் கொண்டு ஒற்றையாட்சிக்குள் தீர்வுக்கு சம்மதம் தெரிவித்துள்ளமை மாவீர்களுக்கு செய்யப்படும் மிகப் பெரும் அநீதி என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு

 

அதன்போது, மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ உங்களுடைய பிள்ளைகள் ஒற்றையாட்சியை ஏற்க மறுத்து உயிர் கொடுத்து 15 ஆண்டுகள் இன்று கடந்துள்ள நிலையில் எங்களுடைய மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களின் ஆதரவுடன் இந்த அநுரகுமார அரசாங்கம் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை கொண்டு வந்து நிறைவேற்ற தயாராகி கொண்டுள்ளனர்.ஆகவே மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் அதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள கூடாது.

19ம் திகதி ஜனாதிபதிக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றது, இதில் தமிழர்களுடைய 70 வருட கால சமஷ்டி கோரிக்கையை கைவிட்டு வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமையை கைவிட்டு பௌத்தம் அரச மதம் என்பதை ஏற்றுக் கொண்டு ஒற்றையாட்சிக்குள் ஒரு தீர்வுக்கு சம்மதம் தெரிவித்து விட்டு வந்துள்ளனர்.

அது மிகப் பெரும் அநியாயம் அது மாவீர்களுக்கு செய்யப்படும் ஒரு அநீதி இந்த ஒற்றையாட்சி நிராகரிக்கப்பட்டு தமிழர்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட்டு தீர்வு எட்டப்பட்டால் நீங்கள் மாவீர்களுடைய அம்மாக்கள் அப்பாக்கள் ஆனால் ஒற்றையாட்சி திணிக்கப்பட்டு தமிழர்கள் ஏற்றக் கொள்ளப்படுவார்களாக இருந்தால் ஒற்றையாட்சியை எதிர்த்து போராடியவர்கள் சமூகவிரோதிகள் என இலங்கையின் வரலாறு எழுதும் என்பதுடன் இந்த மண்ணில் நீங்கள் முற்று முழுதாக அழிக்கப்படுவார்கள்.

அநுர சட்டத்திற்கு அனைவரும் சமம் என தெரிவித்து திருகோணமலையில் புத்தர் சிலையை நிறுவி இருக்கிறார் எனவே அவர் பௌத்தத்திற்கு அடிமை என்பதை நிரூபித்துள்ளார்” என்றார்.

Related Post

காதலன் தேவை என விளம்பரம் செய்த பெண்

Posted by - August 9, 2023 0
டேட்டிங் செல்வதற்கும் வயது வித்தியாசம் இல்லை என கூறும் நிலை வந்துவிட்டது. இந்நிலையில் நியூயார்க்கை சேர்ந்த விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், ஆண் காதலன் தேவை என்று…

விண்வெளியில் கீரை, தக்காளி விளைவித்த சீன வீரர்கள்

Posted by - October 24, 2023 0
பீஜிங்: அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைத்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளது. அதே போல் சீனா, சொந்தமாக விண்வெளி…

பாகிஸ்தானில் துணிகரம் – இந்துக் கோவில்கள் மீது தொடர் தாக்குதல்

Posted by - July 17, 2023 0
லாகூர்: பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் ராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டுகால பழமையான இந்து கோவில் ஒன்று அமைந்திருந்தது. இந்த…

மரணத்தை தள்ளிப்போட தினமும் 4,000 அடிகள் நடக்க வேண்டும் – ஆய்வு

Posted by - August 11, 2023 0
வார்சா: எந்த வயதினரும் செய்யக்கூடிய உடற்பயிற்சி நடைபயிற்சியாகும். ஓடுவதன் மூலம் உருவாகும் காயங்களை நடைப்பயிற்சியில் தவிர்க்க முடியும். நாம் நடக்கும் போது ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றோம்.…

“ஆட்டம்” காண துவங்கிய “ஆயிரம்” வருட கோபுரம்

Posted by - December 2, 2023 0
வட இத்தாலியில் உள்ள போலோனா (Bologna) நகரில் இரு மிக பெரிய கோபுரங்கள் அருகருகே உள்ளன. உலக அளவில் பல வரலாற்று நூல்கள், குழந்தைகளுக்கான பாடல்களிலும், பயண…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *