90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் விளையாடிய இன்ஸ்டா காதலி.. நாமக்கல்லில் நடந்தது என்ன?

92 0

நாமக்கல்லில் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்த பெண்ணால் 34 வயது இளைஞரின் வாழ்க்கை பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது ப.வேலூர். இந்த ஊர் அருகே அமைந்துள்ளது பாண்டமங்கலம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். தற்போது பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 34 வயதான இவருக்கு வீட்டில் நீண்ட நாட்களாக வரன் தேடி வந்துள்ளனர். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக மகாஸ்ரீ என்ற பெண் பழக்கம் ஆகியுள்ளார்.

இன்ஸ்டா காதல்:

இருவருக்கும் இடையேயான இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மகாஸ்ரீயிடம் அவரைப் பற்றி ஸ்ரீதர் விசாரித்தபோது, அவர் தனக்கும் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும், தனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் என்றும், தனது வயது 30 என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஸ்ரீதரிடம் மகாஸ்ரீ வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, தனது வீட்டில் தனது காதலி மகாஸ்ரீ பற்றி பேசியுள்ளார். திருமணத்திற்கு முதலில் ஸ்ரீதர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி நாமக்கல்லில் உள்ள பாண்டமங்கலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ஸ்ரீதர் – மகாஸ்ரீ திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் மகாஸ்ரீ உறவினர்கள் வெகு குறைவாகவே பங்கேற்றனர். தங்களது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஸ்ரீதர் மற்றும் மகாஸ்ரீ பதிவிட்டுள்ளனர்.

புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி:

இந்த நிலையில், நேற்று காலை ஸ்ரீதர் வீட்டிற்கு காரில் வந்த சிலர் திடீரென மகாஸ்ரீயை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், ஸ்ரீதர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மகாஸ்ரீக்கு 30 வயது இல்லை என்றும் அவருக்கு 42 வயது என்றும் தெரிய வந்துள்ளது. மேலும், மகாஸ்ரீக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. மகளுக்கு 15 வயதும், மகனுக்கு 13 வயதும் ஆகிறது. இதையறிந்த ஸ்ரீதர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மகாஸ்ரீயை தாக்கியது அவரின் முதல் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

ஏற்க மறுத்த கணவன்:

கடுமையான அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளான ஸ்ரீதர் மற்றும் அவரது வீட்டார் மகாஸ்ரீயை ஏற்க மறுத்துவிட்டார். பின்னர், கடுமையான கைகலப்பு – பிரச்சினைக்குப் பிறகு மகாஸ்ரீக்கு அணிவித்த 5 சவரன் தாலிக்கொடியை திரும்ப பெற்றுவிட்டனர். மகாஸ்ரீயின் மகன் மற்றும் மகள் அவரது பெற்றோரின் பராமரிப்பில் திருநெல்வேலியில் வசித்து வருகின்றனர்.

திருமணமான 3 நாளிலே ஸ்ரீதர் வாழ்வில் அரங்கேறிய சோகம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, ப.வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

ஆட்சியாளர்களுக்கு ஆபத்து? தஞ்சை பெரிய கோவிலுக்கு மேல் தோன்றிய வெளிச்சம்.. உற்று பார்த்தால் ஷாக்!

Posted by - December 26, 2023 0
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. வால்மீன்கள்…

தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தினால் அடுத்த மாதமே பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிவிடும்: ராமதாஸ்

Posted by - April 8, 2024 0
சென்னை: இந்த தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தினால், அடுத்த மாதமே பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் சிக்கலா…மாட்டிக்கொண்டு முழிக்கும் செந்தில் பாலாஜி…

Posted by - May 31, 2023 0
கோவையில் கோல்டு வின்ஸ் பகுதியில் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் நடைபெற்று வந்த சோதனை காலை 8.15 மணி அளவில் நிறைவு பெற்றது.   மின்சாரம்…

பான் கார்டு ஆதார் இணைப்புக்கு அவகாசம் நீட்டிப்பு.. வெளியான முக்கியத் தகவல்!

Posted by - March 28, 2023 0
PAN-Aadhaar linking : வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் பான் எண்ணை…

கும்பகோணம்:கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த மாணவி… கும்பகோணத்தில் பரபரப்பு

Posted by - February 3, 2025 0
நீண்ட நேரம் கழித்துதான் அந்த மாணவி வகுப்பறைக்கு வந்துள்ளார். அப்போது அந்த மாணவியின் உடலில் பல மாற்றங்களை கவனித்த சக மாணவிகள் விசாரித்துள்ளனர். மேலும் மாணவியின் ஆடையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *