வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

130 0

தாயுமானவர் திட்டத்தில் டிசம்பர் 6, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள்

ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் ரேஷன்கடைகளில் மலிவான விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசி, சக்கரை, பருப்பு, பாமாயில் என உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 2கோடியே 27 லட்சத்து 5ஆயிரத்து 961 குடும்ப அட்டைகளுக்கு உணவு பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இதிலு வயது மூத்தவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களால் நியாயவிலைக்கடைக்கு சென்று உணவு பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனை கருதி தமிழக அரசு சார்பாக தாயுமானவர் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று  உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது.

வீடு தேடி வரும் உணவு பொருட்கள்

அந்த வகையில் டிசம்பர் மாதம் உணவு பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்டுள்ள பதிவில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டிசம்பர் மாதத்தின் 6, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னையில் அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை,

 

தேதி அறிவித்த தமிழக அரசு

அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம். தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி. க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும்  நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Post

தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்… பொதுமக்கள் அஞ்சலி… மதியம் 1 மணிக்கு இறுதி ஊர்வலம்

Posted by - December 29, 2023 0
தேமுதிக தலைவரும், நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு…

‘சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரா பொன்முடி?’ பதவியை பிடுங்கியும் வாய் பேசுவதால் திட்டம்..!

Posted by - June 4, 2025 0
”பொன்முடி மீது நடவடிக்கை எ டுக்கவில்லையென்றால் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வரும் மற்ற நிர்வாகிகளின் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இது பற்றி…

சற்றுமுன் வந்த மழை அலர்ட்.. 6 மாவட்டங்களில் மதியம் 1 மணிக்குள் சம்பவம்! பறந்து வந்த வானிலை அறிவிப்பு

Posted by - December 20, 2023 0
சென்னை: அடுத்த 3 மணி நேரம் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து வெளியான வானிலை…

ஏது பாஜகவிற்கு ஆட்சியில் பங்கா? அதெல்லாம் கிடையாது – எடப்பாடி பழனிசாமி தடாலடி விளக்கம்

Posted by - April 16, 2025 0
பாஜகவிற்கு ஆட்சியில் எல்லாம் பங்கு கிடையாது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா…

செல்போன் செயலி மூலம் கலர் பிரிண்ட் எடுத்து ரூ.20 லட்சம் கடனை அடைக்க கள்ளநோட்டு அச்சடித்த வாலிபர்கள்

Posted by - August 14, 2023 0
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (40). இவர் அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு வந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *