ஊதிய உயர்வு விவகாரம்: இடைநிலை ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

121 0

பொருளாதாரம் மற்றும் கல்வியில் முதலிடத்தில் உள்ள தமிழ்நாடு ஊதியம் வழங்குவதில் கடைசி இடத்தில் உள்ளது என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை நிறைவேற்றாவிட்டால், வருகிற 24 ஆம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றை வாக்குறுதியை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை எழும்பூர் லாங்ஸ் தோட்ட சாலையில் இருந்து ராஜரத்தினம் மைதானம் வரை பேரணியாக சென்றனர்.

இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “2009 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதிக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, தூய்மை பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தை நிர்ணயம் செய்தார்கள். அப்போது கருணாநிதி, மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் ஊதிய முரண்பாடு கலைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதே வாக்குறுதியை அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து 4 வருடங்களை கடந்த நிலையில், தற்போது வரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஜனவரி 1, 2023 ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனையை களைவதற்கு குழு அமைத்தனர். தற்பொழுது அந்த குழுவும் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.

இவர்களுக்கு தரமான ஆசிரியர்கள் வேண்டும். ஆனால், தகுதியான ஆசிரியர்களுக்கு தேவையான ஊதியத்தை வழங்க முடியாது. பொருளாதாரம் மற்றும் கல்வியில் முதலிடத்தில் உள்ள தமிழ்நாடு ஊதியம் வழங்குவதில் கடைசி இடத்தில் உள்ளது. பிற மாநிலங்களில் வழங்குவது விட குறைந்த ஊதியத்தை எங்களுக்கு வழங்குகின்றனர். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற எங்களின் ஊதிய முரண்பாடு தீர்க்காவிட்டால், வருகிற 24 ம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டம், உண்ணாவிரதம், மறியலில் ஈடுபட உள்ளோம். எங்கள் வாழ்வாதாரம் மேம்படும் வரை போராட்டம் தொடரும். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் உடனடியாக கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.

எத்தனை அடக்குமுறை வந்தாலும், வீட்டுக்காவலில் வைத்தாலும் போராட்டம் தொடரும். அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தீர்வு காண வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

Related Post

“விடியா அரசு என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் விடியா மூஞ்சிகள்” – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

Posted by - December 5, 2024 0
தானும், துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் களத்தில் இருப்பது எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றெரிச்சலாக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாம் என சிலர் மலிவான அரசியல் செய்து…

மத்திய அரசின் தயவில் ஆட்சி நடத்தும் திமுக அரசு… ஊழலில் திளைக்கும் தமிழக அமைச்சர்கள் ; அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு..!!

Posted by - December 19, 2023 0
விழுப்புரம் ; விழுப்புரம் மாவட்டம் மத்திய அரசின் திட்டத்தில் தான் தமிழக அரசு நடக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முழுவதும் 122…

ரம்ஜான் பண்டிகை எப்போது..? தலைமை ஹாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Posted by - April 10, 2024 0
ரம்ஜான் பண்டிகை தேதி குறித்த முக்கிய அறிவிப்பை அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளதார். ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு…

கொள்ளை பணத்தில் சுற்றுலா சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கும்பல்- கோவை மருதமலையில் சிக்கினர்

Posted by - August 7, 2023 0
கோவை: கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. இது தொடர்பாக மாநகர போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட…

மூதாட்டிகளை குறிவைத்து கொள்ளை: திருட்டு பெண் படம் அனுப்பி போலீசார் தேடுதல் வேட்டை- கை, கால்களை உடையுங்கள் என ஆடியோ

Posted by - August 14, 2023 0
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த சிறுகிளாம்பாடி செங்கம் மேலப்பாளையம் திருவண்ணாமலை சுற்றியுள்ள பகுதிகளிலும் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து பெண் ஒருவர் காரில் வந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *